செ.புனிதஜோதி/நிலையாமை

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள்

சுருங்கிப் போன
உறவை கண்டு
வருத்தப்படுகிறது
அன்பியல்…

முதுகிலேறி நிற்கும்
தனக்கான அடையாளங்களை
நோக்கி ஓட
எல்லோரும் சிறகை வளர்க்கும்
பறவைகளானோம்
என்று சொல்கிறது
வாழ்வியல்…

நதியின் ஓட்டத்தில்
விழுந்த சருகாயிருந்தால்
அடையாளமற்று போவது
உறுதி என்கிறது
அனுபவம்..

சொற்களை அடுக்கி
ஆயிரம் சொன்னாலும்
எதுவுமே நிலையில்லை

என்னும்
உண்மையை மெதுவாய் உணர வைக்கிறது
தத்துவம் …

அதை மனம் கைக்கொள்வதற்குள்
முதுமையின் வாசலில் அமரவைக்கிறது
காலம்.