2. கி.சரஸ்வதி/ஜன்னலற்றவள்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள்

நகரத்தில் இருக்கும் மூத்த மகனின்
வீட்டுக்குக் குடிபெயர நேரிட்டது அம்மாவுக்கு
அதுகாறும் இருந்த இருண்ட அடுக்களை
இவளுக்கு விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுத்த நாளைச்
சிறிது கண்ணீரோடுதான்
அவள் ஏற்றுக்கொண்டாள்
புத்தம்புதுக் கண்ணாடி அடுப்பு
பீங்கான் கிண்ணங்கள்
பளபளக்கும் பாத்திரங்கள்
நவீனச் சமையலறை
என்று ஏகபோக வாழ்வு அவளுக்குக்
கிராமத்தின் ஜன்னல் வைத்த
அடுப்படியில்
அவள் பார்க்கக் கொய்யா மரமும்
குருவிகளும் இருந்ததை
மட்டும் அடிக்கடி நினைத்துக் கொள்கிறாள்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் – விருட்சம் நாளிதழ்

One Comment on “2. கி.சரஸ்வதி/ஜன்னலற்றவள்”

Comments are closed.