
அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள்
அந்தக் கங்குள் இரவில் எழுதி முடித்த கவி புத்தகம்
கந்தக மண்ணிலிருந்து வந்த செந்தணலாய் பக்கங்கள்
பசிக்கடியில் எழுதிய கவிதை
ஆதலால் தான் திருப்பும் போது சத்தமிடுகிறதோ
பாமரனின் சிலுவை வாழ்க்கையைப்
பேசுவதால் முணுமுணுத்ததோ
கண்ணாடியில் அடைபட்ட
மூன்று பந்தயக்காரர்களின் ஓட்டத்தில்,
மரண அவஸ்தையில்
எழுதியதாலோ
கரிசக்காட்டின் மரத்துப்போன
வடுக்களை நிமிண்டியதால் வந்த கூச்சலோ
வான வேடிக்கை செய்த கைகள்,
இன்று காகிதத்தில் உரிமை பேசுவதால் வந்ததோ
பக்கங்களில் விழியெறிந்து நெருப்புக்
குழம்பாய் உள்ளிறங்கும் வார்த்தைகள்
தீயிலிட்டாலும் வார்த்தைக் கங்குகள் வெடித்துச் சிதறிடுமே
மெய் நிகர் உலகில் முடிவிலியாய்
என்றும் முணுமுணுக்கும் பக்கங்கள்

One Comment on “3. லட்சுமி பாலா/முணுமுணுக்கும் பக்கங்கள்”
Comments are closed.