
அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள்
குடி வந்த புது வீடு, மிகப் பிடித்துப் போனது.
சிறு வீட்டு வாசலில், கண் பறிக்கும்
வண்ண மலர்ச் செடிகள்.
விளக்கெரியும் துளசி மாடம்,நேர்த்தியான கோலத்துடன்.
பெரிய மொட்டை மாடி ,நடக்க மிக வசதி.
வரும் பறவைகள் ஏராளம்.
நித்தம் காலை எனை அழைத்த, காக்கைக்கு அன்னமிட்டேன்.
மாலை மாடியில் அமர்ந்து,அக்கம் பக்கம் பார்த்ததில்,
குயில், மைனா, புறா இவை தவிர
எனை மிகக் கவர்ந்த கிளிகள், எதிர் வீட்டு மா மரத்தில் !
தானியங்கள் வைத்தால்,தானாக வந்து உண்ணுமென,
ஒரு கூண்டு வாங்கி, அது நிறையத் தானியம் வைத்தேன்.
மைனா, குயில், புறா,அனைவரும் வந்தனர்.
உண்டனர் .களித்தனர். எனக்கும் மிக்க மகிழ்ச்சி!
கிளிகள் எட்டிக் கூட பார்க்கவில்லை !
கிளி பழங்கள் உண்ணும் என, வாங்கி விருந்து வைத்தேன்.
அதையும் மதிக்கவில்லை! ஏன் இந்த பாரபட்சம்?
மிகவும் அழகான வண்ணத்தில், நிறமாக இருக்கும் கர்வமா?
அல்லது, உமக்குப் பேச கற்றுத் தந்த மானுடர், நிறம் பார்த்துப்
பழகவும் சொல்லித் தந்தனரோ ?
3. லட்சுமி பாலா/முணுமுணுக்கும் பக்கங்கள் – விருட்சம் நாளிதழ்

One Comment on “4. கலாவதி பாஸ்கரன்/நிறம்”
Comments are closed.