5. அன்பாதவன்/ஏதிலியாய் அலையும் மியாவ் குட்டி

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள்

தாய்ப்பூனையால் நிராகரிக்கப்பட்ட குட்டியொன்று
ஒதுங்குகிறது தெருவின் வீட்டு வாசல்களோரம்
கதவுகளேதும் திறக்கப்படாமல் துளிப்பால் தரவும் எவருமில்லை.
ஒட்டியவயிறோடு தனித்தலையுமதனை
நடுங்கச்செய்கிறது கூதல் பனிக்காற்று
பழையக் கோணியோ பலனில்லா அட்டைப்பெட்டியோ போதும்
கடந்துவிடலாமிக்குளிரை.
ஜீவன் இரட்சிக்க ஏதோ உணவு…ம்ஹூம் வாய்ப்பேயில்லை
தொலைக்காட்சி சப்தத்துள் மானுடர் தொலைந்து வெகுநாளாச்சு
அருகிருந்த வேம்பு அழைத்தது குட்டியை:
“செல்லமே..என்னிடம் வா பசியாற்ற வழியில்லை
கிளைகளில் ஓய்வெடு:உறங்கு”
அநாதியில்லை நானெனத் தாவியமர்ந்த
பசியின் கதறல் கேட்கிறது வான்வரை.

4. கலாவதி பாஸ்கரன்/நிறம் – விருட்சம் நாளிதழ்

One Comment on “5. அன்பாதவன்/ஏதிலியாய் அலையும் மியாவ் குட்டி”

Comments are closed.