அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள்

  1. இராம. மீனாட்சி சுந்தரம்
  1. இயற்கை ஈந்திடும் பேரானந்தம்

கொழிக்கும் வளமும் கொள்ளை அழகே!
செழிக்கும் இயற்கை உயிர்வளி வீசும்!
பொழிலின் அழகில் மகிழ்ச்சி பொங்கும்!
எழிலாய் மணக்கும் பூக்கள் ஆனந்தம்!
நெஞ்சம் மகிழும் சோலைகளின் காட்சி!
கொஞ்சும் இனிமைக்கு வனங்களே சாட்சி!
மலர்ச்சி காணும் மழலையர் புன்னகை!
கிளர்ச்சி தருமே காதலியின் மென்னகை!
பசுமை வளர்ச்சி பல்லுயிர் வாழும்!
பசுமைச் சுழற்சி மழையே பேணும்! (10)
மாசிலா காற்று மகிமை ஈட்டும்!
தூசிலா உலகம் சுவைத்திடும் வாழ்வும்!
சுழலும் குளிர்ச்சி சுகந்தம் வார்க்கும்!
குழலின் இசையால் மகிழ்ச்சி ஆர்க்கும்!
ஆழியின் அலையோசை ஆர்வம் சேர்க்கும்!
ஆழியின் அழகே கண்களை ஈர்க்கும்!
மயிலின் ஆடல்தரும் கண்களில் குளிர்ச்சி!
குயிலின் கூவு மிசை செவிகளில் மலர்ச்சி!
ஊற்றின் சீரெழிலில் உள்ளமே ஆர்த்திடும்!
ஆற்றின் நீரோட்டம் வளங்களைக் கோத்திடும்! (20)

One Comment on “அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள்”

Comments are closed.