இந்திரநீலன் சுரேஷ்/பூஜைக்கு வராத மலர்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள்

முட்களுக்கு நடுவே பூத்த புது ரோஜாவை
முந்தி பறிக்கப் போட்டியிட்ட காலம் ஒன்று.
பகலில் உறங்கி இரவில் மலரும் அல்லியாக
மடை மாற்றிய பின் காவல் இல்லை,
வேலியில்லை ; காதலிக்க ஆளும் இல்லை.
மனம் காண, மணம் காண
மனிதரும் இல்லை. உடல் கொண்டு
பொருள் தந்தவர்க்கு, உள்ளம் தர ஏதுமில்லை.
உபயோகித்து எறிந்த நெகிழியை,
நெகிழ்வுடன் நோக்க கண்கள் என்றும் இல்லை.
காலம் கடந்ததால் காசும் இல்லை,
காவியம் படைத்திட யாரும் இல்லை.
பசியைத் தீர்த்தவளின், பசி பற்றி
மற்றவர்க்குக் கவலையும் இல்லை.
அடுத்தவன் வருகைக்குக் காத்திருக்கும்
இவளுக்கு,
வரப்போவது கடவுளா, காலனா?
நிச்சயம் காதலன் இல்லை.

One Comment on “இந்திரநீலன் சுரேஷ்/பூஜைக்கு வராத மலர்”

Comments are closed.