ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 91/அழகியசிங்கர்

ஆசிரியர் பக்கம்

மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
 மோகினி: வணக்கம்.
அழகியசிங்கர் : வணக்கம். 
ஜெகன் : அமர்க்களமாய் ஒரு கூட்டம் நடத்தி விட்டீர்கள் போலிருக்கிறது. 
அழகியசிங்கர் :  ஆமாம். ஆனால் இது குவிகம் நடத்திய கூட்டம்.  விருட்சம் புத்தகத்திற்காக. 
மோகினி : நல்ல விஷயம்
அழகியசிங்கர் :  ஞானக்கூத்தன் பெயரில் ஜனவரி 15ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நான் ஒரு கவிதைப் போட்டி நடத்தினேன்.  குறுகிய காலத்தில் 90 கவிதைகள் வந்தன.  அதில் 62 கவிதைகளைத் தேர்ந்தெடுத்து ஒரு புத்தகமாகக் கொண்டு வந்தேன். அப் புத்தகத்திற்குத்தான் கூட்டம்.
மோகினி :  கேட்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது. 
அழகியசிங்கர் :  கூட்டத்திற்கு வந்தவர்கள் அந்தப் புத்தகத்தில் இடம் பெற்ற கவிஞர்கள்.   
ஜெகன் :  அவர்கள் வந்திருந்து உங்களுக்கு ஆதரவு கொடுத்தார்களா?
அழகியசிங்கர் :  ஆதரவு கொடுத்தார்கள்.  அவர்களுக்குப் புத்தகப் பிரதிகளைக் கொடுத்தேன்.  புது மாதிரியாக இந்தக் கூட்டத்தை நடத்தினேன். எல்லோரையும் அவர்களுடைய கவிதைகளை வாசிக்கச் சொன்னேன்.  கூடவே ஞானக்கூத்தன் கவிதைகளையும் வாசிக்கச் சொன்னேன்.
மோகினி :  ஞானக்கூத்தனை ஞாபகப்படுத்தும் விதமாக நீங்கள் செய்துள்ளீர்கள்.
அழகியசிங்கர் : ஞானக்கூத்தன் ஒரு குறிப்பிடப்பட வேண்டிய கவிஞர்.  அவரை முன் உதாரணமாக எடுத்துக்கொண்டு எல்லோரும் கவிதை எழுத வேண்டுமென்ற என் முயற்சி ஓரளவு வெற்றி பெற்றது என்று சொல்லலாம்.  
மோகினி :  கவிதைப் புத்தகம் எத்தனைப் பக்கங்கள்?
அழகியசிங்கர் : 80 பக்கங்கள். விலை ரூ.100. மொத்தம் 62 கவிதைகள். 
ஜெகன்:  வருடா வருடம் இதுமாதிரி போட்டி நடத்துவீர்களா?
அழகியசிங்கர்.  நடத்துவதாகத்தான் உத்தேசம்.  அடுத்த ஆண்டு பொங்கல் போது இது மாதிரி போட்டி நடத்துவதாகத்தான் உள்ளேன். 
மோகினி : இப்படிப்பட்ட தொகுப்பு சிறப்பாக இருக்கும்.
அழகியசிங்கர் : ஆமாம்.
மோகினி : தொடர்ந்து இன்னும் பேசலாம். 
அழகியசிங்கர் : பேசலாம்.இரவு மணி 11.05  ஆகிவிட்டது. இத்துடன் முடித்துக்கொள்ளலாம்.
                    (இரவு 11.05 மணி)