அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள்

அன்பில் தோன்றுவது காதல்
ஆசையில் தோன்றுவது காமம்
நெகிழ்ச்சியில் இன்பம் காதல்
பொங்கிடும் வெப்பம் காமம்
கண்ணீரில் ஆனந்தம் காதல்
தன்னலக் கொடூரம் காமம்
பார்த்துக் களிக்கும் காதல்
தழுவத் துடிக்கும் காமம்
முத்தம் கேட்கும் காதல்
மொத்தமும் அபகரிக்கும் காமம்
இதயத்தின் மொழி காதல்
உடலின் மொழி காமம்
வெற்றி தோல்வி காதலுக்கில்லை
தோல்வியை ஏற்காது காமம்
விட்டுக் கொடுக்கும் காதல்
வெட்டிச் சாய்க்கும் காமம்
காதல் பிரிவுக்கும் மரியாதை உண்டு
காமத்தீயில் இறக்கும் அபாயம் உண்டு
இளைஞரே அன்பாம் நட்பு போதாதென்றால்
காதலராய் மட்டுமே இருந்தல் நலம் !
