
அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள்
என்னடா தம்பி கைக்கட்டி
இப்படி நிற்கிறாயே…உனக்கு
என்னதான் வேலை தருவது?
யோசித்தவாறே கேட்கிறேன்
எழுத படிக்கத் தெரியுமா உனக்கு?
இல்லை என்று தலையாட்டுகிறான்
வீட்டுவேலை தோட்ட வேலை?
அதுவும் தெரியாதா? சரி சரி
வேறு என்னதான் தெரியும்?
அங்கே கத்தும் மாடுகளைக் கண்டு
பொங்கிவரும் ஆனந்தத்தால்…அவன்
முகமலர்ந்து தொழுவத்தைக் காட்டி
உரத்த குரல் எழுப்பிச் சொல்கிறான்
மாடுமேய்க்கத் தெரியும் ஐயா!
