ஸ்ருதி ரமணி/காட்சிகள்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள்

அவிழ்த்து விடப்பட்ட
கிழண்டு போன குதிரைகள்
ஓட்டிவிடப்பட்ட
ஒன்றுக்கும் உதவா மாடுகள்
மதில்களில் மறைந்து பதுங்கி
பால் திருடக் காத்திருக்கும்
கள்ளப் பூனை
இரவுப் பேருந்தில் அகப்பட்டு
சாலையில் பதிந்த சித்திரமாய்
கோரக் காட்சியாய்
கண்ணில் பட்டுவிடும் ஒரு நாய்
கோயில் –
வாயிலிலும் வெளிகளிலும்
தவிர்க்க இயலாமல்
தவறாமல் காணக் கிடைக்கும்
இளைத்து நொந்த இரவலர்கள்
இவற்றினிடையே
நடைப் பயிற்சியாய்
வீட்டிற்கு வெளியே
விரியும் நிம்மதி தேடி
வீதிகளின் வழியே

வலிந்த சிரிப்போடு
விசாலமாய் உலாத்தும்
முதியோர் என்கிற
சீனியர் சிட்டிசன்ஸ்!!