
அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள்
அந்த
பன்னீர்ப் பூக்கள் மரம்
ஒரு பெரிய நிழற்குடையாய்
கவிந்து
தரை எல்லாம்
பூ விரி மெத்தை
அந்த பெரும் ஏரி
நீர்ப் பிடிப்பில்
லட்ச லட்சமாக நீந்தும்
மீன்கள்
அந்த நீல
விரிவான் பரப்பெங்கும்
முத்து முத்தாய்
நட்சத்திர பதிப்புகள்
அந்தக் கவிஞன்
நோட்டு எங்கும்
வெண் மண்
கவிதை வயலாய்
