கோவர்தனா/தொலைந்து போய்க்கொண்டிருக்கிறேன்

ஞானக்கூத்தன் நினைவாகப் பரிசுப் பெற்ற கவிதை

எப்பொழுதோ எங்கேயோ
தொலைந்து போய்விட்ட
என்னை மீட்கும் பணியில்
தயவுசெய்து
யாரும் என்னை
மீட்க முயல வேண்டாம்
மீட்கப்பட வேண்டியது
எவ்வளவோ இருக்கின்றது
அதில் எதை வேண்டுமானாலும்
தாராளமாக தாங்கள்
மீட்டு எடுக்கலாம்
மீட்டுக்கொண்டிருக்கும் பொழுதே
நீங்கள் தொலைந்து போய்விட்டால்
தயவு செய்து
என்னைத் தேடாதீர்கள்
நானே அப்படி தான்
என்னைத் தொலைத்துவிட்டேன்
மீட்பர்களே அவதரிக்காத வெளியில்…