
“ராஜேஷ் ஏன் டல்லாக இருக்கே? எதுவும்
பேசாமல் முகத்தில் சோகம் திரையிட இப்படி
உன்னை பார்க்கவே கஷ்டமாக இருக்கு”
“என் தலைஎழுத்து. அதைப்பற்றி சொல்லிஎ
உன்னையும் தொல்லைப்படுத்த விரும்பல்லே”
” புரியும்படி சொல்லு”
“இன்னும் ரெண்டுநாளில்பணம் கட்டாடிபரீட்சை எழுத முடியாதாம்.
ஆசிரியர் சொன்னார்”
“சரி கட்டிடு இதில் என்னப்ராப்ளம்”?
“அதை ஏன் கேட்கிறே,அதுக்காக நான் வெச்சிருந்த பணத்தை ரகசியமாய் எடுத்து
அப்பா சரக்கு வாங்கிக்குடிச்சுட்டார். அம்மா பாவம் சமையல் வேலைபார்த்து குடும்ப
செலவை சமாளிக்கிறாள்.நான் காலையில்
தினம் வீடுகளுக்கு பத்திரிகை போட்டுசம்பாதித்து சேமித்த பணம் அது.
அதையும் இப்ப இழந்துட்டு என்னசெய்வது
என்று தெரியாமல் குழம்பிக்கிட்டிருக்கேன்”
“ஏன் கவலைப்படறே யாரிடமாவது கேட்டு
வாங்கலாம்”
“அதெல்லாம் சரியாகாது. பணம் யார் குடுப்பாங்க”?
“என்ன அப்படி சொல்லிட்டே நான் இருக்கேன்”
“வேண்டாம் உனக்கு ஏன் தொந்தரவு”
“ஒரு தொந்தரவும் இல்லை. நாளைக்கே
கட்டிடலாம்”
அருண் சொன்னபடி செய்தும்விட்டான்.
மறுநாளே பணத்தைக்கொண்டு வந்து கட்டிவிட்டான்”
“ராஜேஷ் உன்னை மாதிரி நண்பன் கிடைக்க
நான் ரொம்ப குடுத்துவெச்சிருக்கணும். உனக்கு எப்படி நன்றி சொல்லறதுன்னே
தெரியல்லே”
“நீ எப்பவும் வகுப்பிலேயேஅதிகமாய் மார்க்
வாங்கி முதல் இடத்தில் இருப்பவன்.உனக்கு
நான் ஒரு நண்பனாக இதுகூட செய்யாட்டி
எப்படி”
இரண்டுநாட்கள் கழித்து அருண்வழக்கம்
போல டூவீலரில் வராமல் கல்லூரிக்கு நடந்து
வருவதைக்கண்டு திகைத்துப்போனவனாய்
“ஏன் நடந்து வரே என்னாச்சு”?
என்றான்.
“அது வந்து”
அவன் பதில் சொல்லத்தயங்குவது தெரிந்தது
“சொல்லு”
“உனக்கு தேவையான பணத்தை உடனே
கொடுக்கவேண்டி வந்ததாலே டூவீலரை
வித்துட்டேன்”
“என்னது வித்துட்டியா ?ஏன் அப்படிப்பண்ணே
ராஜேஷ் அதிர்ந்துபோனான்.
“ஒரு நண்பனுக்காக நான் இதை செய்யக்
கூடாதா?”
ராஜேஷ் கண்களைத்திரையிட்ட கண்ணீரு
டன் விரைந்து சென்று அருணைகட்டிப்
பிடித்துக்கொண்டுரு”நீ ஒரு நண்பன்
மட்டுமல்ல.எனக்கு துணைநின்றதெய்வம்”
என்று இறுக அணைத்துக்கொண்டான்.
