இராஜாமணி/இலக்கற்ற பயணம்

ஞானக்கூத்தன் நினைவாகப் பரிசுப் பெற்ற கவிதை

முடிவில்லா நீண்ட பயணத்தைத்
தொடங்கிய போது
பலரும் கூடப் பயணித்தார்கள்.

ஏற்றமும்,இறக்கமும்
சவால்களுமான
பயணத்தில் கூட வந்த பலர்
சிலரானார்கள்.
இலக்குகளை அடைந்தபின்
புதிய இலக்குகளை நோக்கிய
பயணம் தொடர்ந்தது.

நீண்ட தூரம் பயணித்தபின்
இலக்குகளென்று எதுவுமில்லை
என்றுணர்ந்த பொழுது,
தொடங்கிய இடத்திற்குத்
திரும்ப முடியாப் பயணமானது.

கூடப் பயணித்தவர் யாரும் இல்லை.
அவரவர் பயணம் அவரவர் பாதையில்.
தொடர்ந்த பயணமே இலக்கு என்ற
அறிந்த பொழுது பயணம் சுகமாகிப்போனது.

One Comment on “இராஜாமணி/இலக்கற்ற பயணம்”

Comments are closed.