
அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள்
மாதம் ஒரு நாள்
“அம்மா, ஒரு மாரி ‘கேரா’ இருக்கு”
எனக் கூறி விடுப்பு எடுப்பாள்
வீட்டுப் பணி புரிபவள்
விதவைகளுக்கான உதவி பணம் வாங்க
அவள் “39 க்யூ 39” வரிசையில்
நிற்கும் நாள் அது
எனத் தெரியும் எனக்கு
அதே போலத்தான்
ரேஷன் பொருட்கள் போடும் அன்றைக்குச்
சமையற்காரிக்கு
வரும் ‘கால் வலி’ யும்
புறநகரில் தன் அண்ணனுடன்
வசிக்கும் அம்மாவைப்
பார்க்கப் போகும் அன்று
டிரைவருக்கு
வரும் “தலைவலி” யும்
தெரிந்தே ஏமாறுதலிலும்
ஒரு சுகம்
இருக்கத்தான் செய்கிறது
