
அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள்
காற்றின்றி வெளி
மகிழம்பூ ஒன்று
மெத்தென்று முத்தமிட்டது
பாதத்தை.
நீல நிற வானம்
வெள்ளிக் கதிர்களினூடே
சாரல் துளி சில்லென்று
புறங்கையில்.
அந்தி மாலை மயக்கத்தில்
சாதி மல்லி நறுமணத்தின்
போதை; நாசியில்.
கருநீல வானில்
ஒளிர்ந்த தாரகை
களிப்புடன் சரட் டென இறங்கியது;
நெஞ்சில்.
கண்மூடி நிற்கையில் என்றோ நிகழ்ந்த
நிகழ்வுகள்;
நினைவு படுத்துகின்றன;

Nandru