இரா.சீனிவாசன்/இடைவெளி

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள்

உன் வீட்டு வெளிக்கதவும்
என் வீட்டு வெளிக்கதவும்
அருகாமையிலிருந்தாலும்
அவைகளே எல்லைக்
கோடுகளாய் அமைகின்றன
பார்வையை பரிமாறிக்கொண்டாலும்
நேசத்தை பரிமாறிகொள்ள
முயல்வதில்லை.
உன்னைச் சார்ந்த நிர்பந்தங்களும்
என்னைச் சார்ந்த அழுத்தங்களும்
எல்லைக்கோடுகளாய் நின்று
யாசிக்கவும் யோசிக்கவும்
வைக்கிறது.