மேரி சுரேஷ்/இன்னுமொரு வாழ்வு

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள்

இன்னும்
எங்கேயோ
என் வாழ்வு
மீண்டுமாய்
மற்றுமொரு பெயரில்
வேறொருத்தியால்
வாழ்ந்து கொண்டேதான் இருக்கிறது
நான் விரும்புவது போல.

இருக்கிற இடம் தெரியாமல்
நடந்து கொள்கிறாள்
நிம்மதியாக.

ஏனென்றால்
அவள்
புத்திசாலி.