அரவிந்தன் ராஜாமணி/மூன்றாம் ரகம்

ஞானக்கூத்தன் நினைவாகப் பரிசுப் பெற்ற கவிதை

பள்ளியில் இரண்டு விதமான
மாணவர்களைப் பத்தி தான் பேசுவார்கள்.
நோட்டீஸ் போர்டுல பேர் வரணும்னு
ஆசைப் படுபவர்கள்,
பிளாக் போர்டுலா பேர் வந்தாலும்
பார்துக்கலாம் என இருப்பவர்கள்.

விதிமுறைக்கு உட்பட்டு நடப்பவர்கள்,
விதிமுறைகளை மீறி புது விளையாட்டுகளை
ஆடுபவர்கள்.

ஃபர்ஸ்ட் பென்ஜில் ஆர்வம் கொண்டவர்கள்,
கடைசி பென்ஜில் வேறொரு
உலகத்தில் வசிப்பவர்கள்.

தொண்ணூறு வாங்கிட்டு வருந்துபவர்கள்,
நாற்பதுக்குக் குஷி ஆட்டம் போடுபவர்கள்.

புறவுலகம் ஒண்ணு சொல்ல
மனசு ஒண்ணு சொல்ல,
இரண்டிலும் ஆசையுடன்
குழம்பித் தவிக்கும்
மூணாவது ரகம்.
அதுவே அவர்களின்
வாழ்க்கையைச் சுவாரசிய
படுத்திக்கிறது.