
இவர் அறையின் ஜன்னல்
வழியே பார்த்தால் .எதிர் திசையில்
அவர் அறையின் ஜன்னல் தெரியும்
சரியான நேரத்திற்கு
ஜன்னல் அருகே
இருவரும் வந்து விடுவார்கள்
சாப்பிட்டாச்சா? என்பது போல்
சைகையில்
இவர் அவரை கேட்ப்பார்?
ஆமாம் என்பது போல்
அவர் தலையசைத்து விட்டு
நீ ? என்பது போல் சைகை காட்டுவார்
இப்படி சில நேரம் அன்பு பரிமாறப்படும்
அதற்குள் மூச்சு வாங்கும் இருவருக்கும்
இருமல் தொடரும்
முதுகு தண்டில் சுளீர் என்ற வலி ஒன்று
பரவும்
தலை சுற்றும்
கண்ணுக்குள் இருளும்
உடம்பு படுக்கச் சொல்லி வேண்டும்
கடைசியில் யாராவது ஒருவர் இன்னொருவரை வாழ்த்துவது போல் சைகை செய்வார்.
அத்துடன் அன்றைய பரிமாற்றம் நிறைவு பெறும்
மீண்டும் ஜன்னல் அடைக்கப்படும்
அறையெங்கும் இருள் பரவும்

கீழ் வரும் குறிப்பு எனது மனதுக்கு பட்டவை.
திரு. அதிரனின் கதை / கவிதை ( கவிதையென செவ் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு இருப்பதால் ) ஜன்னல்,
என்ன சொல்ல வருகிறது என புரியவில்லை. அவரின் படைப்பின் மையம் என்ன என்று தெரியவில்லை.
அவரே அதை விளக்கினால் ரசிக்க உதவும்.
எனது தாழ்மையான கருத்து, கடுமையாக உணர்ந்தால் மன்னிக்கவும்.