ப.மதியழகன்/கும்பமேளா

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள்

இந்த வாழ்க்கை என்னிடமிருந்து
அனைத்தையும் பறித்துக் கொள்கிறது
நான் கற்ற சொற்களை
நான் படித்த புத்தகங்களை
என்னிடம் அன்பு காட்டியவர்களை
என்னுடைய தாய், தந்தையை
என்னுடைய மனைவியை
என்னுடைய குழந்தைகளை
என்னுடைய குருமார்களை
என்னுடைய அந்தரங்கங்களை
என்னுடைய நினைவுகளை
எனக்கு ஒளி தரும் சூரியனைக்
கண்சிமிட்டும் நட்சத்திரங்களை
வெளிர்நீல வானத்தை
கிளிஞ்சில்களை ஒதுக்கும் கடலை
இப்படியாக
என்னை மட்டும் விட்டுவைத்துவிடுகிறது
கங்கை நதிக்கரையில்