
அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள்
உலகின் மிகப் பெரிய
லாகிரி வஸ்து
உள்ளங்கை வெள்ளித்திரை
விரலின் தொடு முனையில்
இணையமே கணையமாய் சுரக்க
இனிப்பின் கீறல்களில் காலம் கழிகிறது
மனிதக் குலத்தை முடக்கிப் போட்ட
டவர்களின் வலைத்தள குள்ளநரிகள்
எங்குப் பார்த்தாலும்
கரட்டாண்டிகளின் தலை தூக்கல்கள்
தூக்கித் தூக்கிப் பார்க்கும்
இடைச் செருகல்களில்
விளம்பரம் கொழிக்கும்
இன்னொரு மாய உலகம்
ஸ்கிப் துப்பும் எண்கள் முடிய
வெறுப்பேற்றும் இன்னுமொரு
ஸ்கிப்புகள் எண் போட்டு
இந்த விளையாட்டு பல்லிகளால்
மன சுவரில் குமைச்சல் பச்சக்
