
ஞானக்கூத்தன் நினைவாகப் பரிசுப் பெற்ற கவிதை
அம்மா ஒரு நாள் தோசை கேட்டாள்
காரியம் ஆயிரம், காரணம் ஆயிரம்
சும்மா இரேன் தோசைதான் குறைச்சல்
அடக்கி விட்டேன் அன்று, அவளும் மறந்தாள்.
அடுத்த முறை கேட்ட போது
மாவு வாங்க மறந்து போய் இருந்தேன்.
மீண்டும் ஒரு நாள் அன்றும் வைதேன்
எண்பதும் ஆச்சு,தோசை மேல் என்ன ஆசை
இருக்கிற பிரச்சினையில் தோசைதான் கேடா
மகள் பாவம் என்று நினைத்தாளோ
மறந்தும் விட்டாள், இறந்தும் விட்டாள்
இன்று அம்மாவுக்குத் திதி ஞாபகமாய்
தோசை வார்த்து காக்காய்க்குப் போட்டேன்!!!

🥲🥲