கோபி கிருஷ்ணன்/இயக்கம்

20.05.2025 அன்று கவிதை வாசிக்கலாம் வாங்க நிகழ்வில் வாசித்த பிறர் கவிதைகள்

பிரபஞ்சத்தில் என்றோ
ஒரு துகள்
ஏன் என்று தெரியாது
ஆனாலும்
உருவெடுத்தது.

காலம் உருள,
துகளும் உருண்டது.
பிற துகள்களுடன்
உரசி
மோதி, கலந்து
சில உறவுகள், உணர்வுகள்
பிரமைகள், அர்த்தங்கள் அனர்த்தங்கள்
லட்சியங்கள் கொள்கைகள் வெறும் மாயைகள்
உணர்வுகளில் சிக்கல்கள்
முரண்படல்கள்
ஒதுங்குதல்
ஒதுக்குதல் சுமுகம் இணக்கம் வித்தியாசம் அந்நியமாதல்
சிக்கல்கள் உபாதைகள்
சந்தோஷத்தின் சாயைகள் கீற்றுக்கள்
குழப்பங்கள் தெளிவுப் போலிகள்

அமைதியாக
சந்தோஷமாக
சார்புகளையும் கறைகளையும்
களைந்து
காலவெள்ளத்தில் கரையும் இத்துகள்.

One Comment on “கோபி கிருஷ்ணன்/இயக்கம்”

Comments are closed.