தேவதேவன்/அக்கரை இருள்

20.05.2025 அன்று கவிதை வாசிக்கலாம் வாங்க நிகழ்வில் வாசித்த பிறர் கவிதைகள்

நதி என்னை அழைத்தபோது
நதி நோக்கி இறங்கிய படிக்கட்டுகளில்
நடைவிரிப்பாய் விரிந்திருந்தது
பாறையின் மேலிருந்த
என் அறையின் விளக்கொளி

இருண்டிருந்த அக்கரையிலிருந்தும்
என் நெஞ்சைச் சுண்டும் ஒருகுரல் கேட்டேன்
முளைத்த துயரொன்றை
கைநீட்டிப் போக்கிற்று
இக்கரை நின்றிருந்த தோணி

என் பாதஸ்பரிசம் கண்ட நதி
அக்கரைக்கும் ஓடி சேதி சொல்ல-
நதியின் ஸ்பரிசத்தை ஆராதனையாய் ஏற்றவாறு
தோணியை அடைந்தேன்.
நட்சத்ரங்கள் நிறைந்த நதியை
என் துடுப்பு கலக்கவும்தான்-திடுக்குற்றேன்

அதுசமயம்,
நதி நோக்கி இறங்கிய படிக்கட்டுகளில்
நடைவிரிப்பாய் விரிந்திருந்த
என் அறையின் விளக்கொளி
கூப்பிடுவது கேட்டது

கோபி கிருஷ்ணன்/இயக்கம் – விருட்சம் நாளிதழ்

ரா. ஸ்ரீனிவாஸன்/சூரியனைத் தவிர – விருட்சம் நாளிதழ்

One Comment on “தேவதேவன்/அக்கரை இருள்”

Comments are closed.