செ.புனிதஜோதி கவிதை

சித்தார்த்தனிடத்தில்
புத்தனையும் –
புத்தனிடத்தில்
சித்தார்த்தனையும் தேடுவது
முரண்.

கிடைத்ததும்,
கிடைக்கப் பெற்றதும்,
கிடைக்கப்போகிறதும் –
அனைத்துமே
அனுபவம்.

குளத்தில்
கல்லெறிந்து
சலனத்தை ஏற்படுத்துவதைவிட,
அமைதியின் மேல்
என்னையே
நிதர்சனமாக வைத்து
நான் பார்ப்பது
அருவழி.

பிறரின் இருளை
நீக்கவோ,
இருளென்று
வியாக்கியங்கள் பேசவோ
நான் யார்?

அவரவர்
உள்ளங்கை அளவிற்கே
வெளிச்சம்.

என் இருள் விலக,
என்னை
எனக்குள்ளே
விளக்கேற்றி
வைத்துக்கொள்ள வேண்டியது
நானே.

காலம் –
விரைந்து வருகிறது.