கே.ஸ்டாலின்/தவறவிட்ட கணம்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள்

பரிசை வாங்கிக்கொண்டு
மேடையிலிருந்து இறங்கியவள்
புகைப்படம் எடுக்கத் தவறியதாய்
மீண்டும் அழைக்கப்பட்டாள்.
விருந்தினர் இன்னொரு முறை
செயற்கை பெருமிதத்தை எளிதாய்
முகத்தில் அணிந்துகொள்ள
அவள் உதட்டுச் சுருக்கத்தில்
எங்கோ மறைந்திருக்கும்
வெட்கப் புன்னகையை மீண்டும்
வரவழைக்க முயன்று
தோற்கிறார் புகைப்படக்காரர்.

One Comment on “கே.ஸ்டாலின்/தவறவிட்ட கணம்”

Comments are closed.