
நேற்று வீட்டைப் பூட்ட மறந்து போய்விட்டேன்.
இன்று காலை
மோட்டார் பைக் எடுக்கையில்
வண்டியின் சாவியை எடுத்து வராமல்
கீழே வந்து விட்டேன்.
நடைப் பயிற்சியில்
ஆசுவாசப்படுத்திக்கொள்ள
உட்கார்ந்த
பூங்காவின் ஒதுக்குப்புற பெஞ்ச்சில்
என் மூக்குக் கண்ணாடியை
விட்டு விட்டேன்.
காய்கறிக்கடையில்
பாக்கி வாங்காதது
தண்ணீர் குழாயை
மூட மறந்தது
மாத்திரை சாப்பிட மறந்தது
ஏன
இப்படியான
மறதிகளின் நாட்கள்
அதிகமாகிக் கொண்டு
வருவது பற்றி
என்
அருமை நண்பர்
டாக்டர் பாஸ்கரனிடம்
ஒரு சந்திப்பில்
ஞாபகம் வைத்துக் கேட்டேன்.
வர வர எனக்கும்
இப்படித்தான் இருக்கிறது
என்று கூறி
சிரிக்கிறார்
என் டாக்டர்.
-

👌