அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள்

புரளும் அலையில்
சுழன்று சுழன்று தன்னை
சுத்திகரித்துக் கொள்கிறதா
இந்த மனம்
தெறிக்கும் நீர்த் திவலைகளாக
நிலையற்ற வாழ்வின்
தேவையற்றவற்றை
உதிர்த்து விடுகிறதா
தெறித்துத்
தெறித்து
இறையிடம்
தன்னை முழுமையாகச்
சமர்ப்பிக்கக்
காற்றில் கரைகிறது
காற்றில் கரைகிறது
காற்றில்
கரைகிறது ஆத்மா
