
அழகியசிங்கரின் என்பா சரம்
🤙🏽 🤙🏽
🍁
ஊடும் பாவும் நைந்தே விட்டது.
ஊட்டமான நூலெடுத்துத்
தைக்க முயல,
பின்னும் பெரிதாய் கிழிசல் ஆனது;
வானம் தெரிந்தது தெளிவாய்.
🍁
ஒட்டுப் போடவும்
வகை இன்றி,
கிழிசல் அங்கும், இங்கும், எங்கும்;
விட்டுத் தொலைக்கவும் மனதில்லை; எனக்கு.
குட்டிசுவரிடம் சொல்லி அழுதேன்.
🍁
நன்செய் நிலம் என்றே நினைத்திருந்தேன்;
நன்னீர் பாய்ச்சி
வளர்த்தேன்;
புன்செயலாச்சு.
வானம் பார்த்த தரிசு அது;
தெரிந்து கொள்ளத்தான் நாளாச்சு.
🍁
வளர்த்தேன் உயிரென நினைத்தே, நான்
கிளர்ந்து எழுந்தேன்;
வளர்ந்து நிற்கையில்;
சளைத்து விழுந்தேன்; 🍁புறங்கை வீச்சில்;
வளர்த்த கடா நெஞ்சில்.
🍁
முட்டுக் கொடுத்தும்,
வெட்டிச் சாய்க்கும்.
கட்டி அணைத்தும்,
விட்டுப் போகும்.
எட்டா உயரத்தில்
கிட்டா இருக்கும்;
அட்டமாய் ஆட்டங்காட்டும் உறவுகள்.
