ஹரணி /இருப்பது ஒரே வாழ்க்கை..

(1) ஒருகாம்பில் ஒருபூவே பூக்கும் ஒற்றைமரம் ஒருபோதும் தோப்பு ஆகாதுகற்றைப் பணம் கடைவழிக்கு வராதுஇருப்பது ஒரே வாழ்க்கை.(2)இருப்பதைக் கொண்டு இறையை வேண்டுஇதுவே நிலைத்து நிம்மதி தாவென்றுஇருப்பதை விட்டுப் பறப்பது வேண்டாம்இருப்பது ஒரே வாழ்க்கை.(3)சாதியைக் கொண்டு சரித்திரம் படைக்கவேதனையே மிஞ்சும் வெறுப்பும் மண்டும்புழுக்கை …

>>

ஆர்.சீனிவாசன்/இருப்பது ஒரே வாழ்க்கை

1. வீழ்ந்தாலும் மீண்டும் எழுந்திடு மனமேவாழ்ந்திடும் நாளை வளமாக்கிடு தினமேசூழ்ந்திடும் உலகில் சாதனை செய்திடுஇருப்பது ஒரே வாழ்க்கை 2. துன்பம் வரினும் துணிவுடனே முன்னேறிஇன்பம் தருகின்ற எண்ணங்களை ஏந்தியேநன்மை செய்வோம் நாள்தோறும் நாட்டிற்குஇருப்பது ஒரே வாழ்க்கை

>>

சசிகலா விஸ்வநாதன்/கிருஷ்ணரே! தவழ்ந்து வாருங்கள்!

(1) சிகைக்காய் அரைத்து நான் வைத்தேன்.சவ்வாது, புனுகும், கற்பூரமும் கலந்தஅண்டா வென்னீரும், ஆறியே போகாமல்,கிருஷ்ணரே! தவழ்ந்து வாருங்கள்! (2) பொன் கிண்ணத்தில் செங்களபம் குழைத்தேநான் வைத்திருக்கேன் கண்ணே! கற்பகமேநீர் வாரும்!இன்பமாய் நீராடகிருஷ்ணரே! தவழ்ந்து வாருங்கள்! (3) மகரக்குழை, குண்டலங்கள், தோள் வளை, …

>>

ஹரணி தஞ்சாவூர்/நல்லாசிரியர் நலம் போற்றுவோம்

1 உண்மை பேசி உளமாரப் பாடத்தைமண்டையில் ஏற்றி மதிப்புற வைப்பார்எதிர்பார்க்காப் பண்பில் இருப்பார் எப்போதும்நல்லாசிரியர் நலம் போற்றுவோம். (2)நேரம் தவறார் நெஞ்சுரம் மிக்கவர்வஞ்சனை இல்லா அன்பில் நிற்பார்பேதங் காட்டாப் பெருந் தன்மையாளர்நல்லாசிரியர் நலம் போற்றுவோம். (3)கண்டிப்புக் காட்டுவார் கனிவுங் கொள்வார்ஏழைப் பிள்ளைக்கு …

>>

பி. ஆர்.கிரிஜா/கிருஷ்ணரே தவழ்ந்து வாருங்கள் !

வெண்ணை, அவல், அப்பம் வெச்சிருக்கேன்சீடை, தேன்குழல், முறுக்கு தயார்பதமாய் அதிரசம் அன்போடு செஞ்சிருக்கேன்கிருஷ்ணரே தவழ்ந்து வாருங்கள் !

>>

ஹரணி தஞ்சாவூர்/கிருஷ்ணரே தவழ்ந்து வருக

1கிண்ணம் நிறைய வெண்ணெய் உண்டுகன்னம் நிறைய முத்தம் உண்டுஎங்கள் எண்ணம் ஏற்றங் கொள்ளக்கிருஷ்ணரே தவழ்ந்து வருக. 2வாயில் உலகம் காட்டி நின்றாய்கோயில் வாயிலில் வணங்கி நிற்கக்கோகுலம் காக்க லீலைகள் செய்தகிருஷணரே தவழ்ந்து வருக. 3வித்தைகள் செய்யும் மாயக் குழலோனேதத்தை மொழியில் சங்கடம் …

>>

பி.ஆர்.கிரிஜா/கிருஷ்ணரே தவழ்ந்து வாருங்கள் !

புவியில் அனைவரும் இன்புற்று வாழ நேர்மை தர்மம் நியாயம் தழைத்தோங்க சாதி மதம் பாகுபாடு நீங்க கிருஷ்ணரே தவழ்ந்து வாருங்கள் !

>>

மு. இராமசாமி/கிருஷ்ணரே தவழ்ந்து வாருங்கள்

நல்லெண்ணம் கொண்டு நானிலம் வாழபல்லாண்டு கூறும் பக்தர்கள் சூழதருமம் தழைத்தோங்கத் தாமதம் சிறிதுமின்றி கிருஷ்ணரே தவழ்ந்து வாருங்கள். –

>>

அழகியசிங்கர்/கிருஷ்ணரே தவழ்ந்து வாருங்கள்

எனக்குக் கிருஷ்ணரை எப்போதும் பிடிக்கும்உலகமே ஒரு விளையாட்டு என்பார்எல்லோருக்கும் என்றும் தோழராய் இருப்பார் கிருஷ்ணரே தவழ்ந்துவாருங்கள் கிருஷ்ணருக்குப் பெண்கள் சவகாசம் அதிகம்அவரைச் சுற்றிலும்கோபியர்கள் கோபியர்கள்அத்தனைப் பெண்கள் சுற்றினாலும்ஒன்றுமில்லை. கிருஷ்ணரே தவழ்ந்து வாருங்கள் ஓஷோ எழுதியகிருஷ்ணா புத்தகம்வாங்கியிருக்கிறேன்இன்னும் நான் படிக்கவில்லைஇப்போது கண்ணில்படவில்லை புத்தகம் …

>>

ச செந்தில் பிரசாத்/நேபாளம் இனி வேண்டாம்

அழகிய சிங்கரின் என்பா(நேபாளம் இனி வேண்டாம்) (1)விமான விபத்துகள் அங்கே பஞ்சமில்லை,இயற்கை சீற்றங்களுக்கு ஏதும் குறையுமில்லை,நோபல் பரிசு கொடுத்தாலும்,நேபாளம் இனி வேண்டாம். (2)பூகோளம் என்ன நினைத்தது தெரியவில்லை,போர்க்கோலம் போட நினைத்ததா புரியவில்லை,ஓலமிட வைத்தது உலகைநேபாளம் இனி வேண்டாம். (3)சிவனின் தலை சரிந்தது …

>>

அழகியசிங்கர்/நேபாளம் இனி வேண்டாம்

1. எப்போதும் என்றென்றும் எனக்குத்தோன்றியதில்லைஆபத்து மிகுந்ததேசத்திற்குப் போக.இருக்குமிடத்தில் இருப்பதுஉசிதம் உசிதம்நேபாளம் இனி வேண்டாம் கண்ணீர் விடஓரிடம் வேண்டும்உறவுகளுடன் பிரிந்துபோகஓரிடம் வேண்டும்புதைக்குழியில் புதைந்துபோகநேபாளம் இனி வேண்டாம் 3ஆண்டவனே ஏன்புத்திக்கெட்டுப் போனார்கள்நம் நாட்டிலேயேஎத்தனையோகோயில்கள் உண்டுஇன்னொரு நாட்டிற்குப்போக வேண்டுமா?நேபாளம் இனி வேண்டாம் 4எனக்கு என்னமோநேபாளம் என்றால்பிடிக்காது. …

>>

பி. ஆர். கிரிஜா/நேபாளம் இனி வேண்டாம்

1. முப்பொழுதும் முக்கண்ணன் அனைவருக்கும் துணைசிந்தை முழுதும் சிவன் நாமம்அம்பலவாணனை அனுதினமும் துதி மனமேநேபாளம் இனி வேண்டாம் 2. சங்கடம் தீர்ப்பான் சங்கரன் எப்போதும்அன்பே சிவம் என்று எடுத்தியம்புஆலயத் தொண்டு சாலவும் நன்றுநேபாளம் இனி வேண்டாம் !

>>

சசிகலா விஸ்வநாதன்/நேபாளம் இனி வேண்டாம்

அழகிய சிங்கரின் என்பா(நேபாளம் இனி வேண்டாம்) (1)நெஞ்சில் நிறுத்திட; நேசனாகும் அவன்!தஞ்சம் அடைந்தோர்க்கு கஞ்சன் அவன்!வஞ்சியாது அஞ்சேல் என இருக்கையில்;நேபாளம் இனி வேண்டாம். (2)அஞ்செழுத்து மந்திரத்தை நெஞ்சிலே எழுதுஎஞ்சிய போதெல்லாம், செஞ்சடையானை நினை.நஞ்சுண்டன் நயந்தே, உன்னை தன்மயமாக்க;நேபாளம் இனி வேண்டாம் (3)இடையூர்தி …

>>

ஆர.சீனிவாசன்/நேபாளம் இனி வேண்டாம்

என்பா – 1 உள்ளத்தில் ஓங்கும் உமையவன் சந்நிதிவெள்ளத்தில் நீரென விளங்கிடும் நன்னிதி;எல்லா இடமுமே ஈசனின் திருக்கோயில்நேபாளம் இனி வேண்டாம். என்பா – 2 அன்பொடு நினைத்திடில் அருள்வரும் சங்கரன்,இன்பமாய் வாழ்வினில் எங்கும் உறை ஈசன்;நெஞ்சமே கைலாசம் நித்தமும் உணர்ந்தால்நேபாளம் இனி …

>>

ச.செந்தில் பிரசாத்/வேறென்ன வேண்டும் எனக்கு?

(1)உன்னையன்றி வேறு ஏதும் வேண்டாம்இயற்கை கோட்பாட்டை மீறிய சிந்தனைகாதல் கற்று தந்த பாடம்வேறென்ன வேண்டும் எனக்கு? (2)தாயின் கையில் ஒரு கவளம்காதலியின் ஓர கண் பார்வைநண்பனின் பலம் துணையாய் வாழ்க்கையில்வேறென்ன வேண்டும் எனக்கு? (3)அன்பு மனைவியின் அமைதி முகம்ஆசை மகனின் இனிய …

>>

அழகியசிங்கர்/வேற என்ன வேண்டுமெனக்கு

கை நிறையாப் பணம் இருக்குவாழ வசதியாய் வீடு இருக்குஎளிமையான சாப்பாடுதூக்கத்துடன் இருக்கு வேற என்ன வேண்டுமெனக்கு எனக்குக் கற்பனைஎதுவும் இல்லையாருடைய துணையைநாடவும் இல்லைஎதையும் சாதிக்கவிருப்பம் இல்லை வேறென்ன வேண்டும் எனக்கு

>>

ஹரணி/கனவு எதுவும் வேண்டாம்

०००(1)எண்ணம் எப்போதும் நலமுற வேண்டும்ஏற்றம் எதிலும் எட்டிட வேண்டும்மாற்றம் கண்டு மதித்திட வேண்டும்கனவு எதுவும் வேண்டாம்.(2)அரும்பு மலரப் பூக்கும் அழகேநதியில் வெள்ளம் பார்க்க அழகேநல்லவர் பேச்சுக் கேட்க அழகேகனவு எதுவும் வேண்டாம்.(3)உயரம் செல்ல ஊக்கம் கொள்கவறுமை வரினும் கலக்கம் களைகதிறமை வளர்க்க …

>>

சசிகலா விஸ்வநாதன்/வரலக்ஷ்மி வரம் அருள்வாய்

🪷அழகிய சிங்கரின் என்பா🪷(🌹 வரலக்ஷ்மி வரம் அருள்வாய்🌹)🪷(1)வேண்டும்; என்று வேண்ட ஒன்றுமில்லை! வேண்டாது இருக்க முடியவும் இல்லை? வேண்டுவது நீயே அறிந்து, பரிந்தருள்வாய்! வரலக்ஷ்மி வரம் அருள்வாய்🪷(2)சஞ்சல புத்தி அகன்றிட நான் தஞ்சமென உன்னை நாடி அடைந்தேன்! வஞ்சனை கொஞ்சமும் இன்றி …

>>

சசிகலா விஸ்வநாதன்/வரலக்ஷ்மி வரம் அருள்வாயா

(1)வேண்டும்; என்று வேண்ட ஒன்றுமில்லை! வேண்டாது இருக்க முடியவும் இல்லை? வேண்டுவது நீயே அறிந்து, பரிந்தருள்வாய்! வரலக்ஷ்மி வரம் அருள்வாய்🪷(2)சஞ்சல புத்தி அகன்றிட நான் தஞ்சமென உன்னை நாடி அடைந்தேன்! வஞ்சனை கொஞ்சமும் இன்றி எந்தனுக்கு, வரலக்ஷ்மி வரம் அருள்வாய்🪷(3)மிடி ஒன்றுமில்லாமல்செந்தாமரை …

>>

ச.செந்தில் பிரசாத்/விதியின் வழி எதுவோ

(1)“என் வழி தனி வழி”ஜதி சொன்னவரும் விதி விலக்கல்ல…மதி வென்றவரும் விதி விலக்கல்ல…விதியின் வழி எதுவோ. (2)நாம் செல்லும் வழி அதுசெல்ல கூடாத வழி இதுவிதி நடத்தும் வழி எது?விதியின் வழி எதுவோ. (3)ஏன் நமக்கு மட்டும் இப்படி?கேள்விகள் எழும் பல …

>>

அழகியசிங்கர்/விதியின் வழி எதுவோ

1. எல்லோருக்கும் எல்லாம் தெரிந்து இருக்கும்நடப்பது எல்லாம்நம்மை அறியாமல்வாழ்க்கையின் சிலகணங்கள் மட்டும் விதியின் வழி எதுவோ 2. எல்லோரும் தினமும்அலுவலகம் போகிறார்கள்சிறுவர்கள் பள்ளிக்கூடம்போகக் கெடுபிடிநான் வீட்டில்சுதந்திரமாக இருக்கிறேன் விதியின் வழி எதுவோ

>>

பி. ஆர்.கிரிஜா/வேறென்ன வேண்டும் எனக்கு !

உற்ற நண்பர்கள் எப்போதும் உறுதுணையாய்இல்லத்தைச் சுற்றி பல ஆலயங்கள்புன்சிரிப்புடன் உணவு விநியோகிக்கும் மனிதர்கள்வேறென்ன வேண்டும் எனக்கு !

>>

ச.செந்தில் பிரசாத்/அலைபேசிக்கு உண்டு அறம்

(1)அறம் பேசி ஆயிரம் அழைப்புகள்புறம் பேசச் சில அழைப்புகள்அதன் அகம் பேசினால் தெரியும்,அலைபேசிக்கு உண்டு அறம். (2)நான் பேசுவதில் சில உண்டு.நீ பேசுவதில் சில உண்டு.அறமற்ற பேச்சுக்கள் கேட்பதும் உண்டு.அலைபேசிக்கு உண்டு அறம். (3)எச்சில் பட்டாலும் கவலை படாது.கோபம் வார்த்தைகளில் பயம் …

>>

ஸ்ரீநிவாஸன்/வேறென்ன வேண்டும் எனக்கு

1. அன்புடனே நாளும் அரவணைக்கும் உள்ளங்கள்இன்பமுடன் சூழ்ந்து இசைந்திருக்கும் நல்லுறவுநம்பிக்கையே வாழ்வில் நலம்தரும் பெருஞ்செல்வம்வேறென்ன வேண்டும் எனக்கு 2. காலை மலர்போலக் களிப்புடன் வாழ்ந்திடநாளும் இறைவனது நாமத்தைப் பாடிடசீலம் நிறைந்தோர் சிறப்புடன் சூழ்ந்திடவேறென்ன வேண்டும் எனக்கு

>>

சசிகலா விஸ்வநாதன்/வேறென்ன வேண்டும் எனக்கு

(1)அயர்வை அறுக்கும் அன்பு மொழியுடன்தயக்கம் போக்கும் மா மருந்தாய்வியக்கும் வண்ணம் இருக்கும் என்னவர்;வேறென்ன வேண்டும் எனக்கு? (2) விரும்பும் வண்ணம் இரு; என்றேகரும்பனைய சொல் சொல்லும் மகள்;நிர்ப்பந்தம் இல்லா இனிய உறவு;வேறென்ன வேண்டும் எனக்கு? (3) நா புரள்வது சற்றே ஏறக்குறையஇருந்தாலும், …

>>

பி.ஆர்.கிரிஜாவின் என்பாக்கள்

1.அவனியில் அளவிலா மாந்தர்கள் உண்டுஉற்ற நண்பர்கள் ஒருசிலர் மட்டும் உண்டுஅனுதினம் அவர்கள் அலைபேசியில் அழைப்பதுண்டுஅலைபேசிக்கு உண்டு அறம் ! 2.வாழ்க்கையில் ஆயிரம் மேடு பள்ளங்கள்உற்றார் உறவினர் வெகு தொலைவில்அன்போடு உதவும் அண்டை வீட்டினர்விதியின் வழி எதுவோ !

>>

மு. இராமசாமி/அலைபேசிக்கு உண்டு அறம்

1. தொலைதூர தேசமெல்லாம் கைக்குள் அடக்கம்;அலைபேசி அருமைச் சாதனம் அறிவோம்;இணைபிரியா நண்பனாய் எப்பொழுதும் உடனிருக்கும்;அலைபேசிக்கு உண்டு அறம் 2. காசிமொழிப் புலவர் பேசும் உரையைக்காஞ்சியில் கேட்கப் பாரதியின் கனவுகாசினி முழுவதும் கேட்கலாம் இப்போதுஅலைபேசிக்கு உண்டு அறம்.

>>

அலைபேசிக்கு உண்டு அறம்/அழகியசிங்கர்

1. எப்போதும் கட்டி அழுகிறேன் அலைபேசியை.கையில் கிடைக்காமல்போய்விட்டால் அவ்வளவுதான்.பொழுதே இல்லாமல்போய்விடும் அன்று அலைபேசிக்கு உண்டு அறம் 2. வீட்டிற்கு எதாவதுவாங்கிக் கொண்டுவர உபயோகம் உண்டு அலைபேசிக்குதூரத்தில் இருப்பவரைப்பக்கத்தில் கூப்பிட அலைபேசிக்கு உண்டு அறம். 3. ஒரு இடம் போகவரநினைத்த மாத்திரத்தில்பணத்தை கைமாற்றஉண்டு …

>>

சசிகலா விஸ்வநாதன்/விதியின் வழி எதுவோ

(1) அங்கிருந்து மீண்டும் நான் வந்தாயிற்றுஇங்கிருந்து மீளவும் அங்கே போகும் நாளை,இன்றிலிருந்தே நான் எதிர்பார்த்து இருக்கிறேன்.விதியின் வழி எதுவோ! (2) இல்லம் வந்ததும் நன்றாக இருந்தது.என்னை அந்தச் சுவர்கள் அணைத்துச்சொன்னது; என்னை விட்டுப் போகாததே.விதியின் வழி எதுவோ! (3) எங்கள் வாசனையால் …

>>

ஹரணி/அலைபேசிக்கு உண்டு அறம்

(1) காதில் வைத்தால் எடுப்பதில்லைகவனம் எதிலும் அறவே இல்லைகாரியம் இல்லை வெட்டிப் பேச்சுஅலைபேசிக்கு உண்டு அறம்.(2)அவசரம் காக்க அவசியம் உதவும்அவசியம் இன்றி ஆயிரம் கதைபேசப் பேசப் பிரச்சினை பெருகும்அலைபேசிக்கு உண்டு அறம்.(3)அளவாய்ப் பேசிட நிறைய நன்மைஅளவின்றிப் பேசத் தீமை அதிகம்வீண்பேச்சு உறவை …

>>

ஹரணி தஞ்சாவூர்/சுதந்திர தின என்பா

(1)உண்மை பேசி உழைப்பு காட்டுகண்ணிமை போலக் கண்ணியம் கொள்உள்ளதில் நிறைவு கண்டு மகிழ்சுதந்திரம் நன்றாய்ப் பேணு. (2)பெருமை பேசாது எளிமை பழகுகருணை கொண்டு காரியம் செய்அருமை அறிந்து ஆற்றல் உணர்த்துசுதந்திரம் நன்றாய்ப் பேணு. (3)வியர்க்க வினை செய்க என்றும்தயக்கம் இன்றித் தயை …

>>

ஸ்ரீநிவாஸன்/சிவனே போற்றி போற்றி

கங்கை முடிமேல் அணிந்த கயிலைநாதாகண்ணில் கருணை பொழியும் பரஞ்சோதிஎங்கள் துயரங்கள் யாவும் களைந்தருள்வாய்சிவனே போற்றி போற்றி நீலகண்டனே நின்ற நிறைமூர்த்திநீறணி மேனியாய் நின்ற பெருமானேநாதமும் வேதமும் ஆன நற்றுணையேசிவனே போற்றி போற்றி முக்கண்ணனே மூவுலகைக் காக்கின்றமுழுமுதற் பொருளே முதல்வா சிவனேஅக்கினி போல …

>>

செந்தில் பிரசாத்/”சிவனே போற்றி போற்றி”

(1)படைப்பவன் கடவுள், காப்பவன் கடவுள்அழிப்பவன் எப்படி? அன்பே சிவம்,என்பதால் கேட்கிறேன், தெரியுமா பதில்?“சிவனே போற்றி போற்றி”.(2)பிறத்தல் போட்டி, வாழ்தல் போட்டிஇருத்தல் போட்டி, இறத்தல் போட்டிஇப்படி இருக்கையில் எப்படி சொல்ல“சிவனே போற்றி போற்றி”.(3)சிவனை பார்த்தால் ஒரு கேள்வி“கடவுள் இல்லை” என்று சொன்னாரேஅவர் இன்று …

>>

ஹரணி/சிவனே போற்றி போற்றி

1)பிறவா யாக்கைப் பெரியோனே பேரருளேபிறந்த என்பிறவி காத்திடும் பெரியோனேஆதியும் அந்தமும் இல்லா நாயகனேசிவனே போற்றி போற்றி.(2)காலம் முழுக்க வேண்டி நிற்பேன்காலம் முடிய காத்து கொடுகாலம் எல்லாம் நிற்பவனே கருணையேசிவனே போற்றி போற்றி.(3)புவனம் முழுதும் காக்கும் பேரறிவேகவனம் முழுக்க நிற்கும் உயிரேஐவகை நிலமும் …

>>

அழகியசிங்கர்/சிவனே போற்றி போற்றி

1நான் வணங்கும்கடவுள் சிவன்தான்என் கனவிலும்சிவன்தான் வருகிறார்என் பெயரில்சிவன் ஒளிந்திருக்கிறார் சிவனே போற்றி போற்றி 2. எப்போதும் வேண்டுவதில்லைதேவையானபோதுதேடுகிறேன்பயம், கவலைசூழும்போது சிவன்படுக்கப் போகும்போதுஒருநிமிடம் நினைக்கிறேன் சிவனே போற்றி போற்றி 3. இப்போதெல்லாம்கோயிலுக்குப்போவதில்லை. ஆனால்பயம் வந்தால்கோயிலுக்கு ஓடுவேன்வணங்கத் தெரியாமல்உருகி வணங்குவேன் சிவனே போற்றி போற்றி …

>>

சசிகலா விஸ்வநாதன்/சிவனே! போற்றி! போற்றி!

(1)புவனம் அனைத்தையும், அண்டம் அனைத்தையும்இயக்காதவன் போல் இயக்கும் இறை!உயிரனைத்திற்கும் மெய்மையும் அறிவையும் அருளும்சிவனே! போற்றி! போற்றி!🕉️(2)அகத்தில் கருமை புறத்தில் வெண்மையெனமண்புழுதி களத்தில் புரண்ட கோவேறு கழுதையென்னும்பொய்யரிடம் சரண் புகாமல், சொல்லுவீர்!சிவனே!போற்றி ! போற்றி!🕉️(3)சிவாய வசி என்று ஓத,சித்திகள் அனைத்தும் மெய் அகப்பட,ஈசனிடம் …

>>

அழகியசிங்கர்/நற்கதியைத் தந்தருளும் நம்பு

யாருக்கும் எந்தத்துன்பமும் இல்லை பொய் சொல்லவில்லைதிருடவும் இல்லை ஏமாற்றவும் இல்லைஉன்னை வணங்குகிறேன் நற்கதியைத்தந்தருளும் நம்பு 2. புத்தகம் படிப்பதுஇப்போதைய நிலை வேண்டாம் என்றால்எதையும் விட்டுவிடலாம் பற்று வைத்துவிட்டதால்மனம் கேட்பதில்லை நற்கதியைத் தந்தருளும் நம்பு

>>

சசிகலா விஸ்வநாதன்/நற்கதியைத் தந்தருளும் நம்பு

(1)விற்புருவம் காட்டி வினையறுக்ககும் கோமான்; உற்பாதம் களைந்து உன்னை மேடேற்றுவான்; ஏற்றுக் கொள், என் சொல்லை; நற்கதியைத் தந்தருளும் நம்பு.🏵️ (2)உப்புற்ற பானை இதென அறிந்தும் சப்பற்ற வாழ்வில் மெப்புற்றது ; ஏன்? தப்பற்ற வாழ வழி காட்டுமிறை; நற்கதியை தந்தருளும் …

>>

ஹரணி/தேவர் அருள்வார் தினம்

1. நல்லது செய்து அல்லது அகற்றிஇல்லம் இன்புற அன்பு காட்டிஉற்ற துயருக்கு உடனே உதவிடதேவர் அருள்வார் தினம். ००० 2.எதையும் தெரிந்து செய்க தெளிந்துமனத்தில் சிந்தை சிறக்கச் செய்கஅஞ்சுவன எண்ணி அஞ்சிட வாழ்ந்தால்தேவர் அருள்வார் தினம்.

>>

சசிகலா விஸ்வநாதன்/தேவர் அருள்வார் தினம்

(1)நல்ல ஒரு நாள் நன்மையாகநாளும் விளைந்திட ;உள்ளமதில் கள்ளமின்றிஎள்ளி நகைப்போர் முன்னிடறாமல் இருக்க;தேவர் அருள்வார் தினம்💥(2)வேல் கொண்டு வினை தீர்க்கும்வேலவன் அவன், சேவடி தொழமேலானது எல்லாம் கை அகப்படும்தேவர் அருள்வார் தினம்💥(3)ஐயன் அளந்தது இரு நாழியே அது கொண்டு அண்டமெல்லாம் உயிர் …

>>

பி.ஆர்.கிரிஜா/தேவர் அருள்வார் தினம் !

1. வானம் பொய்த்து நிலம் தரிசானாலும் ஆளும் தலைவர் அநீதி இழைப்பினும் அங்கங்கே வன்முறை தலை விரித்தாலும் நல்லவர்கள் செய்யும் தர்ம சேவையால் தேவர் அருள்வார் தினம் ! 2. வலிய உதவிக்கரம் நீட்டும் மனமிருந்தால் பிற உயிர்களை நேசிக்கும் பண்பிருந்தால் …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/தேவர் அருள்வார் தினம்

1. நல்லதை நினைத்து நல்லதை செய்தாலும் இறை அடியார்கள் தொண்டு செய்தாலும் மக்கள் சேவையில் மகேசனைக்கண்டாலும் தேவர் அருள்வார் தினம் 2. மழைப் பொய்த்தாலும்பிழைகள் பெருகினாலும், பஞ்சமும் பட்டினியும்தலைவிரித்து ஆடினாலும், நெஞ்சில் ஈரமும்வஞ்சமில்லா சொல்லுமிருந்தால், தேவர் அருள்வார் தினம்.

>>

ஸ்ரீநிவாஸன்/தேவர் அருள்வார் தினம்

அன்பினையே ஆடையென அணிந்துநின்று அறஞ்செய்தால்,துன்பமெலாம் தூரவிடும் தூயநெறி – என்பதனைநம்பி நடப்போர்க்கு நலமெல்லாம் நல்கிடவே,தேவர் அருள்வார் தினம்.

>>

மு. இராமசாமி/தேவர் அருள்வார் தினம்

தோற்றுப்போன முயற்சிகள் பல இருக்கலாம் பலனளிக்காத வேண்டுதல் எதுவும் இல்லை இலக்கை நோக்கிப் பயணிக்க முற்படு தேவர் அருள்வார் தினம்.

>>

ஃபிராங்க் ஓ’ஹாரா/இலக்கிய சுயசரிதை

நான் சிறுவனாக இருந்தபோதுபள்ளி மைதானத்தின்ஒரு மூலையில் தனியாகவே விளையாடிக்கொண்டிருப்பேன்.பொம்மைகளை எனக்குப் பிடிக்காது,விளையாட்டுகளையும் வெறுத்தேன்; விலங்குகள் என்னிடம்இணக்கமாக இருக்கவில்லை, பறவைகளோ பறந்து போயின.யாராவது என்னைத் தேடினால்ஒரு மரத்தின் பின்னால் மறைந்துகொண்டு“நான் ஒரு அனாதை” என்றுஉரக்கக் கத்துவேவேன்.இங்கே இப்போதுஅனைத்து அழகுகளின்நடுவேயிருந்தபடிஇவ்விதமாகக் கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன்என்பதை எண்ணிப் …

>>

மீனாட்சி சுந்தரமூர்த்தி/நம் வாழ்க்கை நம்கையில்

அவர் சொன்னார், இவர் சொன்னார்,எவர் சொன்னால் என்ன? சித்திரத்திற்குச்சுவர் வேண்டும், அவரவர் வரவிற்குஏற்றபடி மகிழ்ந்து கூடி வாழ்வோம். நம் வாழ்க்கை நம்கையில்.

>>

சசிகலா விஸ்வநாதன்/நம் வாழ்க்கை நம்கையில்

அழகிய சிங்கரின் என்பா சரம்( நம் வாழ்க்கை நம்கையில்- ஈற்றடி)🌸(1)நாளைப் பொழுது என்றும் நமக்கெனநம்பி, தன் பாதை தானேதெரிவு செய்து வாழக் கற்க;நம் வாழ்க்கை நம் கையில்🌸(2)நாளை என்ன நடக்கும் என்றஊகத்தில், இன்றையப் பொழுதை கழிக்காமல்இன்றையப் பொழுதை இனிதே வாழநம் வாழ்க்கை …

>>

ராமசாமி/நம் வாழ்க்கை நம் கையில்

அந்திம காலத்தில் அனுசரணை வேண்டுமென்று; சிந்தித்தே வளர்த்த செல்வங்கள் அயல்நாட்டில்; உனக்கு நான் எனக்கு நீ; நம் வாழ்க்கை நம்கையில்.

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/வாய்ச் சொல்லில் வீரரடி

என்பா கவிதைகள் 1..உன்னை போல் இல்லை ஒருத்தி . நீ சிரித்தால் நானும் சிரிப்பேன்! நீ அழுதாலோ நானும் அழுவேன்! வாய்ச் சொல்லில் வீரரடி! 2..நாளை முதல் காபி வேண்டாம் விடிந்ததும் ஏனோ தலைவலி என்பார். ஆவி பறக்கும் நுரையுடன் பில்டர்காஃபி …

>>

ஆர்.ஸ்ரீனிவாசன்/நம் வாழ்க்கை நம்கையில்

கவிதை 1 அன்பினை விதைத்து அறநெறியில் நின்றிடின்இன்பங்கள் தாமே எதிர்வந்து சூழ்ந்திடும்;நம்பிக்கை தீபமாய் நாளும் ஒளிரட்டும் –நம் வாழ்க்கை நம்கையில். கவிதை 2 உழைப்பொடு சேர்ந்த உயர்ந்த நற்சிந்தையேவிழிப்பொடு காக்கும் வினைகளின் செல்வமே;ஒழுக்கம் துணையாக ஓங்கிடும் நாளெல்லாம் –நம் வாழ்க்கை நம்கையில்.

>>

சசிகலா விஸ்வநாதன்/வாய்ச் சொல்லில் வீரரடி

😟 அழகிய சிங்கரின் என்பா சரம்இன்றைய என்பா( வாய்ச் சொல்லில் வீரரடி- ஈற்றடி)😟(1)நான் இருக்கிறேன்; கவலை விடுங்கள்!நான் இருக்கிறேன்பயம் எதற்கு!என்னும் வாய் தான் சொல்லுமவர்வாய்ச் சொல்லில் வீரரடி😟(2)வானத்தை காலால் நான் அளப்பேன்!மணலைக் நான் கயிறாய் திரிப்பேன்!வாய்தான் காது வரை நீளும்வாய்ச் சொல்லில் …

>>

வாய்ச் சொல்லில் வீரரடி/எம்.ராமசாமி

நெகிழியை ஒழிக்கத் தெருமுனைக் கூட்டம்; காலநிலை காக்க விழிப்புணர்வு ஓட்டம்; மரங்களை நடுவதற்கு மாபெரும் திட்டம்; வாய்ச் சொல்லில் வீரரடி.

>>

அழகியசிங்கர்/வாய்ச் சொல்லில் வீரரடி

என்பா எழுதச் சொல்கிறார் அழகியசிங்கர் நாலு வரியில்எழுதி விடலாம் பேசத் தெரிந்தவர்கள்எல்லோரும் உண்மையில் வாய்ச் சொல்லில் வீரரடி 2. என்ன நடக்கப் போகிறது இப்போது நாலு வரியில்ஒருகவிதை அவ்வளவுதான் உலகமே கவிழ்தாற்போல்உழலாதீர்கள் நீங்கள் வாய்ச் சொல்லில் வீரரடி 3. நான் முதலில்புத்தகம் …

>>

வாய்ச் சொல்லில் வீரரடி/ஹரணி

(1) சிரிப்பார் சிரிப்பில் எள்ளல் இருக்கும்பேச்சில் நடிப்பு துள்ளும் பெருங்கேடுஎண்ணியே பெரும்பொழுது கழிப்பர்வாய்ச் சொல்லில் வீரரடி.(2)அகம்பாவம் ஆணவம் அறிவிலா நடத்தைமுகமெலாம் முள்ளாய்க் கல்லாய்ப் பண்புகழுவும் மீனிற்குக் கத்தியாய் இருப்பார்வாய்ச் சொல்லில் வீரரடி.(3)வானத்தை விழுங்கிப் பூமியைக் குடிப்பேன்நான் சொன்னால் நானிலம் நடுங்கும்அவசரம் உதவுங்கள் …

>>

சசிகலா விஸ்வநாதன்/என்பாவே என் என்பாவே

🌸(1)குச்சு வீட்டில் இருந்த என்னை,மச்சு வீட்டில் ஏத்தி விட்டுன்,உச்சி முகர்ந்து பார்க்கையிலே ; ஐயே!என்பாவே என் என்பாவே!🌸(2)எள்ளல் பேச்சை தள்ளி விட்டுஉள்ளம் உள்ளி மள்ளம் கொண்டுமலையேறி நிற்கும் உன்னை; ஐயே!என்பாவே என் என்பாவே!🌸(3)தேசம் விட்டு தேசம் வந்துநேசம் பாசம் நெஞ்சில் வைத்துஆசையாக …

>>

சசிகலா விஸ்வநாதன்/சொல்லி அடித்தார் கில்லி

🏵️அல்லவை நீக்கி நல்லவை தருவேன்;கல் என நின்று வெல்வேன்;வல்லவன் நான் ஒருவனே என்றே;சொல்லி அடித்தார் கில்லி.🏵️பல வேறு சோதனைகள் தாண்டியும்,பலவாறான ஏச்சையும் பேச்சையும் தாங்கியும்,எல்லாமே நல்லது நல்லது என்றே,சொல்லி அடித்தார் கில்லி🏵️அரசியல் உலகு இதுவரை அறியாதவெற்றி, இன்று என் பக்கம்வாகை சூடுவது …

>>

ஆர். ஸ்ரீனிவாசன்/சொல்லி அடித்தார் கில்லி

நல்லது பேசுவார் நாணமும் உடையார்தல்லென தீமையைத் தள்ளுவர் எண்ணிஒல்லென வாழ்வது ஓங்கிடும் நெஞ்சம்சொல்லி அடித்தார் கில்லி. ****** அறிவுடை மாணவர் ஆற்றலும் சேர்ந்துநெறியுடன் நடப்பது நேர்மையின் வழியில்பிறருக்கு நன்மை பயப்பவர் என்றும்சொல்லி அடித்தார் கில்லி. ******* இலவசம் தருவேன் என்று இலகுவாய் …

>>

அழகியசிங்கர்/வாழ்க்கை ஏன் இவ்வளவு மோசம்

1.வாழ்க்கை ஏன் இவ்வளவு மோசம்காலையில் கிணற்று மோட்டார் ரிப்பேர்போர் மோட்டாரும் மக்கர் பண்ணுகிறதுகுளிக்க தண்ணீர் இல்லை 2.வாழ்க்கை ஏன் இவ்வளவு மோசம்காலையில் நடைப் பயிற்சி செய்வேன்ஷு ரிப்பேர்நடைப் பயிற்சி இல்லைஎங்கும் போகாமல்இருந்தேன் 3. வாழ்க்கை ஏன் இவ்வளவு மோசம்கவிதை எழுததயங்குவது ஏன்?மோசமாக …

>>

ஹரணி தஞ்சாவூர்/ வாழ்க்கை ஏன் இவ்வளவு மோசம்

வாழ்க்கை ஏன் இவ்வளவு மோசம்வயது பிள்ளைகள் காதலென்பதில் நாசம்உழைப்பவன் உழைத்துச் சாகிறான் வேஷம்போடுபவன் வியக்க வாழ்கிறான். ***** வாழ்க்கை ஏன் இவ்வளவு மோசம்வயது முதிர்ந்தோர் வாழ்வது மோசம்பெற்ற பிள்ளைகள் கல்லாய் வாழ்ந்திடநல்லவன் வாழ்வது அவலம். ***** வாழ்க்கை ஏன் இவ்வளவு மோசம்போதையும் …

>>

சசிகலா விஸ்வநாதன்/வாழ்க்கை ஏன் இவ்வளவு மோசம்….

(1)வாழ்க்கை ஏன் இவ்வளவு மோசம்?தாழவும் சகியாது இந்த உலகம்.வாழவும் பொறுக்காது இந்த உலகம்.இதெல்லாம் ஒரு வாழ்க்கையா? (2)வாழ்க்கை ஏன் இவ்வளவு மோசம்?விரும்பியவாறு உண்ண இயலா இருப்பு.விரும்பும் நேரம் உறக்கமற்ற இருப்பு.இது ஒரு தவிப்பு. (3)வாழ்க்கை ஏன் இவ்வளவு மோசம்?சிறுநீர் பிரித்தல் மருத்துவம் …

>>

சசிகலா விஸ்வநாதன்/மழை! மழை! மழை!

அழகிய சிங்கரின் என்பா சரம்🌨️ மழை🌨️(1)அலைபேசி திறக்க பண்புடன் வாழ்த்தும்அன்பு உள்ளங்களின் மனதை மயக்கும்சொற்களின் கவர்ச்சி தோரணங்களில், அன்புமழை! மழை! மழை! (2)இன்று போல் என்றும் வாழ்கவென,வாழ்த்தும்,உறவும், சுற்றமும்,அறியுமா;எனக்கு காய்ச்சலென; என்மனதில் கடுப்புமழை! மழை! மழை! (3)தீபாவளி வாழ்த்துகள்! ஒல்லையின்றி அலைபேசியில்,வந்தவுடன் …

>>

சசிகலா விஸ்வநாதன்/பாரதி என் கடவுள்

( அழகியசிங்கர் இன் என்பா சரம்) (1) பார் புகழும் கவிஞன் பாரதி;‘படித்துப் பார்’என்று அளித்து,கண்ணனை கண் முன் காட்டிய பாரதி என் கடவுள் (2)பாரதக் கதையை திரட்டுப் பாலாககுறையாத சுவையுடன் பக்குவமாகக் குறுக்கி,பாஞ்சாலி சபதமாக எனக்கு அளித்த பாரதி என் …

>>

பாரதி என் கடவுள்/விஜயலக்ஷ்மி கண்ணன்

முண்டாசு கட்டும்முறுக்கிய மீசையும்கண்டவுடன் கவிதையில் தேசபக்தியும்வீரமும்,சிங்கம் போல் நிமிர்ந்து கர்ஜிக்கும்பாரதி என் கடவுள்.

>>

அழகியசிங்கர்/எங்கிருந்தாலும் நீங்கள் வாழ்க

1. பலருடன் பேசும்போதுஎப்படிப் பேசவேண்டுமென்று தெரியவில்லைபேசாமல் இருந்திருக்கலாம்ஆனால் விதியாரை விட்டதுஎங்கிருந்தாலும் நீங்கள் வாழ்க 2. இன்றைய அரசியல்எனக்கு வேண்டாம்இன்றைய சமையம்எனக்கு வேண்டாம்அப்ப என்னதான்வேண்டும் உனக்குஎங்கிருந்தாலும் நீங்கள் வாழ்க

>>

சசிகலா விஸ்வநாதன்/ எங்கிருந்தாலும் நீங்கள் வாழ்க

2 கரம் பிடித்து சத்தியம் செய்தீர்கள்‌ஒரு நாளும் விடேனென்றே.கடல் கடந்து சென்றீர்கள்; இருக்கட்டும்.எங்கிருந்தாலும் நீங்கள் வாழ்க விஞ்ஞானி/சாதியக்கூறு – விருட்சம் நாளிதழ்

>>

விஞ்ஞானி/சாதியக்கூறு

உமக்கும் எமக்கும் வரும் காதலைசாதியக் கூறு கூறு போட்டாலும்உதிர்ந்திடும் உதிரம் உரத்த சொல்லும்எங்கிருந்தாலும் நீங்கள் வாழ்க ஹரணி தஞ்சாவூர்/எங்கிருந்தாலும் நீங்கள் வாழ்க – விருட்சம் நாளிதழ்

>>

ஹரணி தஞ்சாவூர்/எங்கிருந்தாலும் நீங்கள் வாழ்க

1.அடிப்படை அறமே அழகிய வாழ்க்கைதுடிக்கின்ற இதயம் நிற்கும் வரைவாழ்ந்திடும் வாழ்வில் உங்களை வாழ்த்துவர்எங்கிருந்தாலும் நீங்கள் வாழ்க. 2. ஏழ்மையில் வறுமையில் துடித்தாலும் செம்மையும்சிரிக்காத வாழ்விலும் சிரிக்கும் ஒழுங்கும்நேயமாய் சகலரையும் அன்புடன் பேணிடவும்எங்கிருந்தாலும் நீங்கள் வாழ்க.

>>

அழகியசிங்கர் /தண்ணீர் பற்றிய என்பா கவிதைகள்

1. இன்று தண்ணீர்நாளாம். அலைகிறோம்தண்ணீருக்காக எங்கும்கையில் இருக்கும்காசை தண்ணீருக்காகசெலவு செய்கிறோம்தண்ணீர் கிடைக்காவிடில்கண்ணீர்தான் 2. தாகம் எடுத்ததுகுடிக்க தண்ணீர்பாட்டில்ஒன்று வாங்கினேன்கடகடவென்று குடித்தேன்எல்லோருக்கும் எங்கும்கதண்ணீர் கிடைக்கவேண்டும் எம் பெருமானே 3. சென்னை வெயிலால்தீப்பற்றி எரிகிறதுதாகத்தால் தொண்டைக்காய்ந்து போகிறதுகண்ணில் படவில்லைதண்ணீர் பாட்டில்ஐயோ, என் செய்வேன்

>>

சசிகலா விஸ்வநாதன்/ உற்றா உறவுகள்

அழகியசிங்கரின் என்பா சரம் 🤙🏽 🤙🏽 🍁ஊடும் பாவும் நைந்தே விட்டது.ஊட்டமான நூலெடுத்துத்தைக்க முயல,பின்னும் பெரிதாய் கிழிசல் ஆனது;வானம் தெரிந்தது தெளிவாய். 🍁ஒட்டுப் போடவும்வகை இன்றி,கிழிசல் அங்கும், இங்கும், எங்கும்;விட்டுத் தொலைக்கவும் மனதில்லை; எனக்கு.குட்டிசுவரிடம் சொல்லி அழுதேன். 🍁 நன்செய் நிலம் …

>>

பி. ஆர்.கிரிஜா/ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம் !

அழகிய சிங்கரின் என்பா! நண்பரின் வருகை தருமே ஆனந்தம்இனிய கானமதை ரசிப்பது ஆனந்தம்காதலன் காதலியை சந்திப்பது ஆனந்தம்ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம் ! ரயில் பயணம் என்றும் ஆனந்தம்ஆர்ப்பரிக்கும் அருவியில் குளிப்பது ஆனந்தம்அம்மாவின் உணவு தந்திடும் ஆனந்தம்ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம் ! 20/01/2025

>>

சசிகலா விஸ்வநாதன்/ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம்

அழகிய சிங்கரின் என்பா விடியலுக்கு முன் விழிக்கும் நேரம்பழம் என முதிர்ந்த முதுகிழவிபதனி குடுவை ஒன்று நீட்டஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம் கண் விழிக்கும் அதிகாலை நேரம்கண் முன் நின்றாள் கற்பகாம்பாள்என் எண்ணத்தில் நிறைந்த காமேசுரிஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம் அலைபேசி சிணுங்கி என்னை …

>>

புஷ்பா விஸ்வநாதன்/ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம்

அழகியசிங்கரின் என்பா படிப்புக்கு ஏற்ற பதவி கிடைத்துமனதுக்கு இனிய மனையாள் கிடைத்துபாசம் மாறாப் பிள்ளை கிடைத்தால்ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம்

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம்

பொசுக்கும் வெயிலுக்கு மழை ஆனந்தம்பச்சிளம் குழந்தைக்கு உறக்கம் ஆனந்தம்பக்தனுக்கு இறை சேவை ஆனந்தம்ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம்.

>>

ஹரணி/ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம்

அழகியசிங்கரின் என்பா.. பசியென்று கேட்டோர்க்குச் சுடச்சுடச் சோறுபால்வடியும் மழலைக்குப் பாசமாய் முத்தம்படித்த நூல் எதுவாயினும் பாராட்டுஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம். (2) எந்த வாசலிலோ அழகுக் கோலம்எந்தக் கோயிலிலோ கையேந்திப் பிரசாதம்வேப்ப மரத்தடியில் அயர்ந்த உறக்கம்ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம். (3) சட்டென்று எழுதும் …

>>

ரவி அல்லது/ஆனந்தம் ஆனந்தம்பரமானந்தம்

அழகிய சிங்கரின்என்பா: நாசி சூழும் மருந்து வாடையில்பணம் கரைந்த நோவின் விடுதலையில்வெளிக்காற்று சுவாசித்துவீட்டுக்கு வருவதுஆனந்தம் ஆனந்தம்பரமானந்தம்.* 20/01/25.01:11ம.

>>

அழகியசிங்கர்/புத்தகங்கள்

அடுக்கி வைத்த புத்தகங்களைப் பார்த்துஎன்ன செய்வது என்று தெரியவில்லை.ஆனால் உற்சாகமாய் இருக்கிறதென்று சொல்லலாம்பலகாலம் காத்திருக்கும் புத்தகங்கள்

>>

காசசிகலா விஸ்வநாதன்/காத்திருப்பு

அழகாய் அடுக்கி வைத்த புத்தகங்கள்அலமாரிகளை அற்புதமாய் அணி செய்தனபழகிப் போன காத்திருப்பு; வாசகர்களுக்கானது.வியாபாரத்துக்கானது அல்ல; தெரியும்தானே! ( அழகிய சிங்கரின் என்பா)

>>

ரவி அல்லது/வல்லான் வகுத்த வழி

அழகிய சிங்கரின் என்பா: மூர்கமாக மோதியாவையும் முடக்கிப்போடுவதும்.தீர்க்கமாக பொய்யைச்சொல்லிதிசை திருப்புவதும்.வாய்மையென வரலாற்றைஎப்பொழுதும் திரிப்பதுவே.வல்லான் வகுத்த வழி.*

>>

ப.மதியழகன்/வல்லான் வகுத்த வழி

1)யாருக்கு வேண்டும் பதவியும் அதிகாரமும்யாருக்கு வேண்டும் மகுடமும் மாண்பும்தீது எதுவென்று அறிகிலார் எல்லாம்வல்லான் வகுத்த வழி! 2)இனிப்பென்றால் இனிக்கும் கசப்பென்றால் கசக்கும்வாழ்வும் மரணமும் இணை கோடுகள்எவருக்குத் தெரியும் சூட்சுமம் எல்லாம்வல்லான் வகுத்த வழி! 3)நம்மால் ஆவது ஏதும் உண்டோகண்டவர் விண்டிலர் விண்டவர் …

>>

சசிகலா விஸ்வநாதன்/வல்லான் வகுத்த வழி

அழகிய சிங்கரின் என்பா 1,பொல்லார் வாழ்வதும்,நல்லார் வீழ்வதும்கல்லார் ஏற்றமும்,கற்றோர் இறக்கமும்,சூரன் தோல்வியும் அசூரன் வெற்றியும்வல்லான் வகுத்த வழி 2 கல்லின் கண் தேரைக்கும் படியளக்கும்கனகன் அவனுக்குநல் உணவாய்ஆலகால நஞ்சு அமைந்த விதிவல்லான் வகுத்த வழி 3.சாதகம் பார்த்து அமைந்த திருமணம்பாதகம் ஆகி …

>>

விஞ்ஞானி/வல்லான் வகுத்த வழி

எல்லோருக்கும் இங்கு எல்லாமும் என்றாலும்எந்நாளும் புவியாளும்பொல்லார்முன் செல்லாதுநல்லார் நலமுறவும்இல்லார் வளம்பெறவும்வல்லான் வகுத்த வழி

>>