அழகியசிங்கர்/ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம்

  1. காலையில் டூவீலரை
    ஓட்டிக் கொண்டு
    போனபோது இந்த
    வரி மனதில்
    கரை புரண்டோடியது
    என்ன செய்வது
    ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம்
  2. நம் கவிதைகளை யாரும் படிக்கத்
    தயாராயில்லை அதனால் என்ன? எழுதிய
    கவிதைகளை நாமே ரசிக்கும்போது இருக்கிறது
    ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம்
  3. கடிக்கப் பல் இல்லை எனக்கு
    ஆனால் பக்கோடா கடிக்க ஆர்வம்
    எப்படியோ கடித்துச் சாப்பிட்டு விட்டேன் .
    ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம்
  4. இந்தப் புத்தகக் காட்சியில் அடுக்கி வைத்த
    கவிதைத் தொகுதிகள் எல்லாம் ஏமாற்றம்
    அளித்தன எதுவும் என்னைவிட்டு நகரவில்லை
    ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம்
  5. வெகு நாட்கள் கழித்து சந்திக்கிற
    நண்பர்களென்றால் சந்தோஷம் அடைந்து விடுகிறோம்.
    அதுவும் பெண்களென்றால் கேட்கவே வேண்டாம்.
    ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம்