சசிகலா விஸ்வநாதன்/ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம்

அழகிய சிங்கரின் என்பா

விடியலுக்கு முன் விழிக்கும் நேரம்
பழம் என முதிர்ந்த முதுகிழவி
பதனி குடுவை ஒன்று நீட்ட
ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம்

கண் விழிக்கும் அதிகாலை நேரம்
கண் முன் நின்றாள் கற்பகாம்பாள்
என் எண்ணத்தில் நிறைந்த காமேசுரி
ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம்

அலைபேசி சிணுங்கி என்னை எழுப்ப,
அம்மா! நாளை அங்கே வருகிறேன்;
என்னும் ஒரு வார்த்தை எனக்கு
ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம்.

விடியலுக்கு முன் நாசியில் ஏறுது ,
டிகிரி காஃபியின் நல் நறுமணம்,
“காஃபி தயார் “அவர் குரல்
ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம்
🪷