சசிகலா விஸ்வநாதன்/நள்ளிரவில் சூறைக்காற்றுடன் சுழன்றடித்தது மழை

அழகிய சிங்கரின் என்பா
என்பா சரமாக இன்று
🪷
நள்ளிரவில் சூறைக்காற்றுடன் சுழன்றடித்தது மழை.

காலையில் தகதகவென மின்னும் சூரியன்.

மாலையில் குளிர் தென்றல் மாருதம்.

இயற்கையின் விளையாட்டு இதுவே.
🪷
தரு ஒன்று சாய்ந்தது தரையில்;

நள்ளிரவில் சூறைக்காற்றுடன் சுழன்றடித்திடும் மழை.

முரசின் ஒலிக்கு ஈடாய் எதிரொலியென,

நிற்கும் நிலம் பிளந்தது.
🪷
கொடையென நினைத்தேன்; கோடை மழையை.

“வரட்டும்; குவலயம் குளிரட்டும்” மகிழ்ந்தேன்!

நள்ளிரவில் சூறைக்காற்றுடன் சுழன்றடித்திடும் மழை;

மேற்கூரை சரியும் வரை.
🪷
தாமிரபரணி கரை புரண்டு ஓட,

வீதி எல்லாம் நதி நீர்.‌

செய்வதென்ன என்று அறியோம்; நள்ளிரவில்.

சூரைக்காற்றுடன் சுழன்றடிக்கும் மழை.
🪷
நள்ளிரவில் சூரைக்காற்றுடன் சுழன்றடிக்கும் மழை.

இருண்ட வானத்திலிருந்து கொப்பளிக்கும் சரமழை

மிரண்ட மக்கள் இங்கும் அங்கும்

ஓடுவதைக் காணும் அவலம்.