சசிகலா விஸ்வநாதன் /என்பா

அழகிய சிங்கரின் இன்றைய என்பா🌧️

மழை மழை மழை மழை
சூல் கொண்டு சுழல்
காற்று
சிலு சிலு சிலு சிலுவென;
குளிர் குளிர் குளிர் குளிர்.
🌧️

மழை மழை மழை மழை
சர மழை;சாரங்கம் உதிர்க்கும்
வாளி போல், சலிக்காமல் பெய்வது
சற்றே நின்றால், தேவலை.
🌧️

மழை மழை மழை மழை
விண்ணையும் மண்ணையும் இணைத்து;விடாமல்
பெய்யும் மழை;ஓயாத ஆனந்தம்;
இயற்கை அருளும் அற்புதம்.

🌧️

மழை மழை மழை மழை
ஊசி போல் இறங்கும் சாரல்‌;
சற்றே வண்ணம் கொண்டு நீலமும்,
வெண்மையும், காண அழகு.

🌧️

மழை மழை மழை மழை
இல்லத்தில் சுடு தேநீர் அருந்தும்
வளமை இருப்போர்க்கு; மழை இன்பம்.
தெருவில் மலர் விற்போர்க்கு?

🌧️

மழை மழை மழை மழை
கூரை வீட்டில் தாரையாய் கொட்டுமது
அடுக்கு மாடி வீடுகளில் அது
ஈர சுவற்றில் இருந்தும்.

🌧️

மழை மழை மழை மழை
வீட்டின் நாற்புறமும் நீர்! நீர்!
நீர் என்று வடியும் எனக்
காத்திருக்குமா; மகளின் பிறப்பு?
🌧️