பி. ஆர். கிரிஜா/என்பா

அழகிய சிங்கரின் என்பா!

மழை மழை மழை மழை
இயற்கை அளிக்கும் அற்புத அமிர்தம்
உலக மக்களின் உயிர் நாடி
சேமிப்போம் கண்ணும் கருத்துமாக !

மழை மழை மழை மழை
ஓயாமல் கொட்டும் ஓரிரு சமயம்
இயற்கையின் சீற்றம் வருணனின் கோபமோ ?
சற்றே ஓய்வெடு
மாரியே !

மழை மழை மழை மழை
சீராகப் பொழிந்தால்
எப்போதும் செழுமை
பலருக்கு தரும் அது ஆனந்தம்
நலிந்தோர்க்கு விளைவிக்கும் பேராபத்து !


15/10/2024
4 20 pm