
என்பா 1
கருணாபுரம் கள்ளச்சாராயத்தால்
பலி நாற்பது
தினசரிகளில் படித்த
செய்தி இது
என்னடா இதுமாதிரி
என்று தோன்றியது
மனித வாழ்வு அவ்வளவுதான்
என்பா 2
கருணாபுரம் கள்ளச்சாராயத்தால்
பலி நாற்பது
பலி எண்ணிக்கை
கூடப் போகும்
வேதனையின் நாக்கு
தொங்கிக் கொண்டிருக்கிறது.
நாங்கள் பார்த்து
கொண்டிருக்கிறோம்
என்பா 3
கருணாபுரம் கள்ளச்சாராயத்தால் பலி நாற்பது
இது ஒரு தொடர் நிகழ்ச்சி
வேறு இடத்தில்
வேறு ஒருநாளில்
குடியர்கள் இருக்கும் வரை.
