
அழகிய சிங்கரின் என்பா
(1)
சரி சரி சரி சரி சரி சரி சரி சரி
சங்கடம்மேதும் இன்றி சரி சரி
என்றே இருந்த எனக்கு எளிதே;
மாற்றுப்பெண்ணிடம் சரியென்றே சொல்ல.
(2)
சரிசரி சரிசரி சரிசரி சரிசரி
என்றே காலத்தை ஓட்டினேன்;என்னிடம்
எல்லோரும் சரி என்க; தெரிகிறது
எனக்கு வயதாகி விட்டதென்று.
(3)
சரிசரி சரிசரி சரிசரி சரிசரி
என்று பெற்றோரிடம் தலையாட்டினது சரியில்லை
என்று உணர்ந்தேன்;
எவரும் சரியில்லை ;
புக்ககத்தில் என்று உணர.
(4)
சரிசரி சரிசரி சரிசரி சரிசரி
பிள்ளைக்கும், பெண்ணிற்கும்,அவருக்கும்,அத்தைக்கும்,
சரி என்றே சொல்லி பழகிவிட்டேன்
தவறு எதுவென்று அறியேன்.
(5)
சரிசரி சரிசரி சரிசரி சரிசரி
என்றே சொல்லி வாழும் வாழ்வு
எளிது என்றே சொல்வேன்; நான்.
எவருக்கும் இடையூறு இல்லை.
(6)
சரிசரி சரிசரி சரிசரி
சரிசரி
அடுக்குத் தொடர் என்பதே சரி
அர்த்தம் தனியே கொடுக்கும் வார்த்தை
அடுக்குத் தொடர் தானே.
