
அழகிய சிங்கரின் என்பா
வயிற்றுப் பாடு
ஒன்று இருக்க;
பயம் ஒன்று
அற்றுப் போகும்.
நைந்த வலையானாலும்
லாவகமாய் விரிக்க
கண்ணீர் கடலில் மீனவர்கள்.
உப்புக் கடலோடி
தப்பாமல் வலை
வீசி, ஒப்புக் கொடுத்தேன் அத்தனையும்
தூத்துக்குடி அங்காடியில் கங்காணியிடம் கடனுக்கு
கண்ணீர் கடலில் மீனவர்கள்
🪷
வலை வீசாமல்
வயிறு நிறையுமா?
மலையாய் அலை வந்தாலும் என்ன?
சலிக்காமல் போவோம்; ஆனது ஆகட்டும்
கண்ணீர் கடலில் மீனவர்கள்
🪷
