மாடல்/தங்கேஸ்

ஒரு ஊர்ல
ஒரு காடு இருந்தது
அதில் ஒரு சிங்கம்
ராஜாவாக தன்னை
முடி சூட்டிக்கொண்டது
அதற்குப் பிறகு அதன் குட்டி
பிறகு அந்த குட்டியின் குட்டி
இப்படி குட்டி வாரிசுகளாகவே
பரம்பரையாக
அந்த காட்டை ஆள ஆரம்பித்தன
அதற்கு சிங்கமாடல் ஆட்சியென்று
பெயர் சூட்டப்பட்டு
விழாவும் எடுக்கப்டுகிறது
ஆனால் அதே காட்டில்
மான்கள் என்னவோ
அதே பயத்துடன் தான்
குட்டையில் இறங்கி
நீர் அருந்துகின்றன
இன்னமும்