
அழகிய சிங்கரின் என்பா
1,
பொல்லார் வாழ்வதும்,
நல்லார் வீழ்வதும்
கல்லார் ஏற்றமும்,
கற்றோர் இறக்கமும்,
சூரன் தோல்வியும் அசூரன் வெற்றியும்
வல்லான் வகுத்த வழி
2
கல்லின் கண் தேரைக்கும் படியளக்கும்
கனகன் அவனுக்கு
நல் உணவாய்
ஆலகால நஞ்சு அமைந்த விதி
வல்லான் வகுத்த வழி
3.
சாதகம் பார்த்து அமைந்த திருமணம்
பாதகம் ஆகி போனது என்ன
உறவினர் இடைஞ்சல் மன விரிசல்
வல்லான் வகுத்த வழி
4.
தலைமுறைக்கு ஒரு பிள்ளை வேண்டி
தவமிருப்போர் பலர்
இங்கு உண்டு
தன் பிள்ளையை விற்பாருமுண்டு
வல்லான் வகுத்த வழி
5.
வஞ்சக மனது வேண்டேன் ஒருநாளும்
சஞ்சல மனது வேண்டேன் என்றும்
நித்தமும் வேண்டினேன் அறியேன் நான்;
வல்லான் வகுத்த வழி
