செந்தில் பிரசாத்/ முதுமை

சேகரித்து வைத்த
கவிதைகளை
செலவழிக்க துணிந்த
காலம்.
பதுக்கி வைத்த
நினைவுகளை
அசைபோட பணிந்த
ஞானம்.
கடந்து வந்த
பாதையை
பின்னோக்கி இழுத்த
நேரம்.
எப்படி எல்லாமோ வாழ்ந்து
கடந்த பின்
எப்படியாவது இருக்க முடிந்த
உண்மை நிலைமை
உணர்த்திய உயரிய பருவம்.