சசிகலா விஸ்வநாதன்/தோண்டத் தோண்ட வரும் சடலங்கள்

இன்றைய அழகிய சிங்கரின் என்பா
🪷
தோண்டத் தோண்ட வரும் சடலங்கள்.
மருண்டு இறந்த மக்களின் சடலங்கள்
வருந்தி கண்ணீர் சிந்த; இயற்கையின்
நிருத்தம் ; மிக வருத்தம்.

🪷
தோண்டத் தோண்ட வரும் சடலங்கள்;
உறக்கம் தொலைத்த
இறைவனின் நாடு.
இயற்கை புரியும் பெரும் பிழை;
ஏன் என்றெமக்கு புரியவில்லை.
🪷

தோண்டத் தோண்டும் வரும் சடலங்கள்.
யார் எவரென்றே அறியாமல், வரும்
கண்ணீர் மழை; அணை போடும்
வன்மை எனக்கு இல்லை.
🪷
தோண்டத் தோண்டும் வரும் சடலங்கள்
வெட்டிய மரங்கள் கணக்கில் உண்டா!
விடை இல்லாத வினா இது;
என்றிந்த அவலம் முடியும்?
🪷