விஞ்ஞானி/ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம்

அழகிய சிங்கரின்
என்பா

  1. கோடையில் கொட்டும் மழை ஆனந்தம்
    கொட்டும் மழையிடை வெயில்
    ஆனந்தம்
    இருப்பதை விடவும் இல்லாதது
    கிடைப்பின்
    ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம்.
  2. பழைய சோற்றுக்கு உப்பு ஆனந்தம்
    உப்புடன் கொஞ்சம் மோரும்
    ஆனந்தம்
    மோருடன் பச்சை மிளகாய்
    இருந்தால்
    ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம்
  3. விஸ்கி தண்ணீர் கலவை ஆனந்தம்
    பிராந்தி சோடா கலவை ஆனந்தம்
    பீர் விஸ்கி பிராந்தி கலவை
    ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம்
  4. மழலைக்கு அன்னையின் குரல் ஆனந்தம்
    இளமைக்கு இணையின் குரல்
    ஆனந்தம்
    முதுமைக்கு வருடும் பரிவின்
    குரல்
    ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம்

One Comment on “விஞ்ஞானி/ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம்”

Comments are closed.