
1.
வாழ்க்கை ஏன் இவ்வளவு மோசம்
காலையில் கிணற்று மோட்டார் ரிப்பேர்
போர் மோட்டாரும் மக்கர் பண்ணுகிறது
குளிக்க தண்ணீர் இல்லை
2.
வாழ்க்கை ஏன் இவ்வளவு மோசம்
காலையில் நடைப் பயிற்சி செய்வேன்
ஷு ரிப்பேர்
நடைப் பயிற்சி இல்லை
எங்கும் போகாமல்
இருந்தேன்
3.
வாழ்க்கை ஏன் இவ்வளவு மோசம்
கவிதை எழுத
தயங்குவது ஏன்?
மோசமாக இருக்கும்போது
பேசாமல் இருப்போம்
வரும் கவிதை பின்னால்
