
வாழ்க்கை ஏன் இவ்வளவு மோசம்
வயது பிள்ளைகள் காதலென்பதில் நாசம்
உழைப்பவன் உழைத்துச் சாகிறான் வேஷம்
போடுபவன் வியக்க வாழ்கிறான்.
*****
வாழ்க்கை ஏன் இவ்வளவு மோசம்
வயது முதிர்ந்தோர் வாழ்வது மோசம்
பெற்ற பிள்ளைகள் கல்லாய் வாழ்ந்திட
நல்லவன் வாழ்வது அவலம்.
*****
வாழ்க்கை ஏன் இவ்வளவு மோசம்
போதையும் பாக்கும் பரவச நாசம்
கற்கும் கல்வி காசின் வேடம்
நம்பிக்கை நல்ல வரம்.
*******
வாழ்க்கை ஏன் இவ்வளவு மோசம்
ஒழுக்கமும் நேர்மையும் உள்ளத்தின் விளக்கு
கடின உழைப்பு வாழ்வின் வெளிச்சம்.
மோசமும் நேசத்தில் மாறும்.
*******
வாழ்க்கை ஏன் இவ்வளவு மோசம்
இருக்கும் வாழ்வை இயல்பில் மாற்ற
மோசமும் மூழ்கிப் போகும் இருளில்
நல்லறமே நல்ல மூச்சு.
*****
