
(1)
வாழ்க்கை ஏன் இவ்வளவு மோசம்?
தாழவும் சகியாது இந்த உலகம்.
வாழவும் பொறுக்காது இந்த உலகம்.
இதெல்லாம் ஒரு வாழ்க்கையா?
(2)
வாழ்க்கை ஏன் இவ்வளவு மோசம்?
விரும்பியவாறு உண்ண இயலா இருப்பு.
விரும்பும் நேரம் உறக்கமற்ற இருப்பு.
இது ஒரு தவிப்பு.
(3)
வாழ்க்கை ஏன் இவ்வளவு மோசம்?
சிறுநீர் பிரித்தல் மருத்துவம் இருக்கலாகுமா?
நீரில் உப்பென கையிருப்பு கரைகிறது.
வரம்பில்லா இல்லா அவதை!
(4)
வாழ்க்கை ஏன் இவ்வளவு மோசம்?
ஏழைகள் இன்னும் ஏழையாகும் தாழ்வு
வாழ வேண்டிய வயதில் வருமானமின்றி
தாழ்வில் வாழ்வு பாழ்
(5)
வாழ்க்கை ஏன் இவ்வளவு மோசம்?
கடன் வாங்கி படித்து வாங்கின
பட்டம்; சட்டத்தில் சிரிக்குது அழகாக.
வாழ்க்கை இளிக்குது; அழுகையாக.
