சசிகலா விஸ்வநாதன்/வயோதிகம்

கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர்

இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை

சாப்பாட்டு மேசையில் என் அண்ணன்:
நெகிழிப்பையிலிருந்து ..
உப்புமாவோ, வெண்பொங்கலோ;
ஏதோ ஒன்றை,
நடுங்கும் கைகளால்
விளம்பிக்கொண்டிருந்தவர் ;
என் அண்ணன் தானா!
திரும்பியே பார்க்காமல்;
நிழல் தட்டியதும்
யாரு? யாரு வந்திருக்கிறது; என்று குரல் கொடுக்க;
‘நான்தான்’
என்று நான் சொல்ல,
‘நான் என்றால் யார்?’ என்று; நிமிர்ந்தவர்;
ஒருகணம் புரியாமல் திகைத்தார்.
‘வா’ என்று அழைக்காமல்;
‘ஏது வந்திருக்கே?
சொல்லு;
சாப்பிடும் நேரமா, உனக்கு? சாப்பிடுகிறாயா?’
வயோதிகத்தின் முகமனை
புரிந்து கொண்டது
இன்னொரு வயோதிகம்…
நான்தான் அது

சசிகலா விஸ்வநாதன்/எண்ணங்கள் – விருட்சம் நாளிதழ்

2 Comments on “சசிகலா விஸ்வநாதன்/வயோதிகம்”

Comments are closed.