சசிகலா விஸ்வநாதன்/எண்ணங்கள்

இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை – 6

கண்காணிக்கிறேன் தினமும் என் எண்ணங்களை!

எண்ணங்களின் விகாரங்களை நிறுத்த
முனைகிறேன்!
வேடிக்கை!
எண்ணங்கள் என்னை நிறுத்த;
எண்ணங்களின் போக்கில் நான்!
நீரலை ஒழுக்கில்
ஒரு கட்டெறும்பு போல்;
பழுத்த இலை மேல்;
அங்கும் இங்குமென.
பழுத்த இலை நனைந்து நீரில்
மூழ்கலாம்;
என்ற பதட்டமின்றி
எண்ணங்களின் ஆளுகையில் நான்!
எண்ணங்களின் நீர் சுழலில்;
கீழே! கீழே!கீழே!
ஆயினும்:
சப்பாணி கொட்டும்
சிறு மதலையென;
களிப்பும்; கண்ணீருமாக
மிதந்தும்; மூழ்கியும்.

சசிகலா விஸ்வநாதன்/மரப்பாச்சி – விருட்சம் நாளிதழ்

One Comment on “சசிகலா விஸ்வநாதன்/எண்ணங்கள்”

Comments are closed.